அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்,தமிழ்நாடு மகளிர் பிரிவு மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் பெண்களின் கூட்டமைப்பு சார்பில் நந்தனம், ஹீமா ஆடிட்டோரியத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம்,தமிழ்நாடு மகளிர் பிரிவு மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் பெண்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை, நந்தனம், ஹீமா ஆடிட்டோரியத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு இந்த அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாத்திமா முசப்பர் தலைமையில் நடைப்பெற்றது. இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தாவது, இராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரியில் 06, 07, 08 டிசம்பர் 2018 ஆகிய தேதிகளில் பெண்களுக்கான சிறப்பு கருத்தரங்கங்கள் நடத்த உள்ளதாகவும், முஸ்லிம் பெண்களின் உரிமைகள் அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், ஷரீயத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மற்றும் கடமைகள் கல்வித் திறமை மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, சமூக நீதி,மற்றும் தேசம் காப்போம் ஆகிய தலைப்புகளில் தலைசிறந்த பெண் பேச்சாளர்கள், முஸ்லிம் இயக்கங்களின் மகளிர் பிரிவு தலைவர்கள், பல்வேறு துறையை சார்ந்த மகளிர் நிபுணர்கள் மற்றும் சாதனைப்பெண்கள் இக்கருத்தரங்கத்தில் கலந்துக்கொண்டு உரையாற்ற உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பர்வீன் பாப்பா, ஷானாஸ் கரீம்பாய், பக்கீரா அதீக் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *