அடுத்த வேளை சாப்பாட்ட நெனச்சி ஒவ்வொரு நொடியும் எண்ணிட்டு இருக்கோம்-பட்டாசு தொழிலாளர்கள் கண்ணீர்

விருதுநகர் போராட்டத்தில்
தொழிலாளர்ககளின் வேதனை

ஒரு லட்சம் மக்கள் நாங்கள் ஒன்றாய் சேர்ந்து கூடினோம்..நடந்து வர தெம்பில்லாமல். மீதி பேரு முடங்கினோம் வந்து சேர்ந்த பாதிப்பேரை
பாதியிலே மடக்கி திருப்பி அனுப்பிட்டாங்க
காவல்துறையும் காரணம் கேட்டு பாதி வழியில் திருப்பிட்டாங்க… !!
ஐம்பது நாள் பட்டினிிியில்
அங்குலம் நகர முடியலே…

கலெக்டர் ஆபிஸ் முன்னாலே கலெக்டர் ‌அய்யாவைக்.காணலே…!
தேடிப்போயி பார்த்ததில்
பதில் ஏதும் கிடைக்கலே..

அமைச்சர் அய்யா வந்தாரு ..
வழக்கம்போல சொன்னாரு
” நானும் தொழிலாளி” என்றாரு…!
முடிவு ? என்ன என்று கேட்டதற்கு அல்வா தானே தந்தாரு…..                ஒட்டு வாங்கி ஓடிப் போன எஜமானர்களே வாருமய்யா…
எங்க பிரச்சினையை
தீருமய்யா..
வாக்கு கேட்டு வந்தோரே..
வாக்குறுதி தந்தோரே..
வந்து எங்களை பாருமய்யா..
வாழ வழி கூறுமய்யா…!!!

அடுத்த மாதம் 22 ல். கோர்ட்டு தானே கூடுது..அது வரையில் வயிற்றுக்குக் கஞ்சி யாரைப் போயி கேட்பது…?
பல நாள் பட்டினி அய்யா..
பாவி அரசே பாரும்மய்யா…!!

அழி ரப்பர் கேட்குது பிள்ளை ஐந்து பைசா கையில் இல்ல
பேரியம் உப்பு தடையாலே..
பென்சில் வாங்க வழி இல்லே..

பரிட்சை பேப்பர் வாங்கித்தர பத்துப் பைசா பையில் இல்லே…

சொகுசு பங்களா
கேட்டோமா..!
ஏ.சி காரு கேட்டோமா..?
500 கோடி .ஆயிரம் கோடி அட. ஒரு கோடி இரண்டு கோடி … அற்ப்புதத் தொகை ஒரு லட்சம் …கடனும் நாங்க கேட்டோமா..?
வேலை தானே கேட்கிறோம்
உழைக்க தானே பார்க்கிறோம்… ரேஷன் அரிசி வாங்கிக்கன்னு
அமைச்சர் அய்யா சொன்னாரு..  அரிசி நாங்க வாங்கிட்டோம்
உப்பு வாங்க வழியில்லே…
பருப்பு வாங்க பணம் இல்லே…

தேயிலை இல்லாமல்
“டீ” இல்லையாம்
காப்பிக் தூள் இல்லாம “காபி” இல்லையாம்.
காமடி தானே செஞ்சாரு..
எங்கள கோமாளியாக்கிப் போனாரு..அலையில்லாம கடலில்லே
எங்க ஓட்டில்லாம அவரில்லே…இதை எப்படி அவருக்கு சொல்லுறது..!
யாரு புரிய
வைக்கிறது..!!!                                  டாக்டர் கலைஞரும் இல்ல.
புரட்சி தலைவியும் இல்ல
இரண்டு பேரும் இல்லாததால்
எங்களை காக்க யாரும் இல்ல…!!!!???? (கண்ணீருடன் பட்டாசு தொழிலாளர்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *