அதிமுக வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் புதியகட்சி துவக்கம் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா

அதிமுக வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் புதியகட்சி துவக்கம் மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா

சென்னை:  அதிமுக வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் புதிய தனிக் கட்சி மற்றும் கொடி அறிமுகம்  நிகழ்ச்சி மற்றும் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் என்ற தனியார் விடுதியில்
இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் கல்வி அமைச்சர் அரங்கநாயகம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்
மேலும் அவர் இந்தக் புதிய கட்சிக்கு திராவிட முற்போக்கு மக்கள் கட்சி என்று பெயரிட்டு கொடியை அறிமுகப்படுத்தினார். தற்போது மாநிலத்தில் ஆளும் கட்சிக்கும், மத்தியில் ஆளும் கட்சிக்கும் நாங்கள் ஆதரவு கொடுத்து தங்களது கோரிக்கையை நிறைவேற்ற பாடுபடுவோம் என இந்த கட்சியின் நிறுவனர் ஸ்ரீதரன் கூறினார். எங்கள் கட்சியின் முதல் கோரிக்கையாக இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும்…..சாதியின் அடிப்படையில் இருக்க கூடாது என்பதே எங்களது கட்சியின் முதன்மையான கோரிக்கை என்றும் கூறினார்..

மேலும் அவர் நான் 1985 இல் இருந்து அதிமுகவில் இருக்கிறேன் அதிமுகவில் இருப்பதால் ஒரு சில கோரிக்கைகளை என்னால் நிறைவேற்ற முடியவில்லை அதனால் தான் தனிக் கட்சி தொடங்கி உள்ளேன்.

இந்திய இறையாண்மையை காத்திடவும், சமூக நல்லிணக்கம், சமூக பொருளாதார வளர்ச்சி கண்டிடவும், பொருளாதார அறிவியல் முறையை பின்பற்றி கிராம வளர்ச்சிக்கும், விவசாயம் கல்வி மேம்பாடு மேம்படுவதற்கான அவசியத்தையும், யதார்த்தத்தையும், மேலும் மருத்துவத்துறையில் அனைவருக்கும் சமமான மருத்துவ சிகிச்சை கிடைக்க பாடுபட போவதாகவும் கூறினார்.

அரசியலில் மூத்த தலைவரும், முன்னாள் அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சருமாக இருந்த திரு. அரங்கநாயகம் அவர்கள் திராவிட முற்போக்கு மக்கள் கட்சியின் குறுந்தகட்டை வெளியீட்டு பேசுகையில் திராவிட முற்போக்கு மக்கள் கட்சி மேற்சொன்ன பழமைவாய்ந்த உட்கட்சி ஜனநாயகம் பற்றி தகுதி வாய்ந்தவர்களுக்கு தகுதி,திறமை,படிப்பு,அறிவு,சுய ஒழுக்கம், சமூக சேவை, பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை கருத்தில் கொண்டு பொறுப்புகளும், பதவிகளும் ஒழுங்கு நடவடிக்கைகள் கட்சி விதிகளின்படி செயல்படுத்தும்,

திராவிட முற்போக்கு மக்கள் கட்சி மக்கள் நலப் பணிகளில் தொலைநோக்குப் பார்வையில் முற்போக்குச் சிந்தனையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கை கோட்பாட்டின் வழியில் அரசியல் பயணம் செய்யும்,

திரு.ஸ்ரீதர் அவர்கள் அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மக்களிடம் நன்கு பழகி மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்தவர், மக்களுக்கு எப்பொழுது என்ன வேண்டுமென்று தெரிந்து கொண்டவர் அரசியல் தலைவர்களுடன் நன்கு பழக்கம் ஏற்படுத்தி வைத்திருப்பவர் இவர் அரசியல் பயணம் கண்டிப்பாக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்,

இந்த நிகழ்ச்சியில் சில முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *