அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் தேர்வு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டி.டி.வி தினகரன் தேர்வு

சென்னை அசோக் நகரில் உள்ள அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.இதில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அவர்கள் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கட்சியின் நிர்வாகிகள் என்னை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்று கூறினார். மேலும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததுபோல் அ.ம.மு.க கட்சியினை பதிவு செய்ய உள்ளதாகவும், வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பரிசுப்பெட்டகம் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சின்னம் என்பது ஒரு பொருட்டே இல்லை மக்கள் முடிவெடுத்து விட்டால் குண்டூசி சின்னத்தில் கூட வெற்றிபெற்று விடலாம் என்று கூறினார்.பின்னர் குக்கர் சின்னத்தை கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க உச்சநீதிமன்றத்தில் கேட்டதாகவும் கூறினார்.தற்போது எங்கள் கட்சிக்கு பரிசுப்பெட்டகம் சின்னம் கிடைத்துள்ளதாகத்தெரிவித்தார். தேர்தல் ஆணையம், ஊடகங்களின் செயல்பாடு என்று அனைத்திற்குமான விடையினை மக்கள் மே 23ம்தேதி தெரிவிப்பார்கள் என்றும் கூறினார். ரஜினிகாந்த் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் கட்சிதொடங்கி தேர்தலில் போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு அவர் வருவதினால் தனக்கும் , எங்கள் கட்சிக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். மேலும் எங்கள் இயக்கம் 1 1/2 கோடி தொண்டர்களுடைய அசைக்க முடியாத இயக்கம் என்றும் குறிப்பிட்டார். சட்டப்போராட்டத்தில் நாங்கள் தோற்ற பிறகு அதிமுகவிற்கு நாங்கள் உரிமை கோரமாட்டோம் ஒருவேளை சசிகலா அதிமுகவை கைப்பற்றினால் அதனை அ.ம.மு.கவுடன் இணைத்து விடுவோம் என்றும் கூறினார்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed