இந்திய மாலுமிகள் நலச்சங்கம் சார்பில் ஆசிய தடகள வீராங்கனை கோமதி

இந்திய மாலுமிகள் நலச்சங்கம் சார்பில் ஆசிய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு பாராட்டு விழா

கிண்டி :இந்திய மாலுமிகள் நலச்சங்கத்தின் 19 ஆம் ஆண்டு விழா மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வாழங்கும் விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,ஒடிசா மாநில முன்னாள்ஆளுநர்ராஜேந்திரன், டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் உதவியாளர் (ஆலோசகர்) பொன்ராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஆசிய தடகள போட்டியில் வெற்றிபெற்று சாதனைப் படைத்த வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சிறப்பு விருது மற்றும் நிதியுதவியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கி பாராட்டி பேசினார். இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தோருக்கான நிகழ்காலம் குளோபல் விருதையும் வழங்கி ஆளுநர் பேசுகையில்..
கடும் சிரமத்திற்கு இடையே கோமதி மாரிமுத்து தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். ஒருவர் தன் மீது நம்பிக்கை கொண்டால் அனைத்து தடைகளையும் வெல்ல முடியும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார். விளையாட்டு மைதானத்தில் சாதி,மதம்,இனம் என அனைத்தும் கடந்து ஒற்றுமையாக வீரர், வீராங்கனைகளை நாட்டு மக்கள் உயர்த்தி பிடிகின்றனர் என்றும் தெரிவித்தார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை இந்திய மாலுமிகள் நலச்சங்க விழாக்குழுவைச் சேர்ந்த பாபு மயிலான்,நிகழ்காலம் முருகன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *