இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கிண்டி : தாத்தா இரட்டைமலை சீனிவாச பறையனார் அறக்கட்டளை சார்பில் ராவ்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 160-வது பிறந்த நாளை முன்னிட்டு கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அறக்கட்டளையின் நிறுவனர் அ. செல்வக்குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் காந்தி மண்டப வளாகத்தில் அதிநவீன வசதியுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ஆம்புலன்ஸ் சேவையை மக்கள் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் சாத்தை A.பாக்யராஜ் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் பேத்தி ரேவதி நாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அருகில் மக்கள் தேசம் கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் ஆசைதம்பி, ஜி.நாகேஷ் ராவ், பிரேநாத் குமார், பாபு மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பிரபாகரன் பிரபு, மாதவன், ராஜ்குமார், ஜெயபிரகாஷ், ஆத்தியப்பராஜ், ரமேஷ் மற்றும் ராதாகிருஷ்ணன், வில்லாளன், வழக்கறிஞர் பாவேந்தன், வளையாவதி, வேத நாயகி ஆகியோர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *