எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இந்திய தேர்தல் மற்றும் அதன் நிலையான பழங்கதை சிறப்பு சொற்பொழிவு -இந்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை ஆணையர் என்.கோபாலசாமி சிறப்புரை

எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இந்திய தேர்தல் மற்றும் அதன் நிலையான பழங்கதை
சிறப்பு சொற்பொழிவு -இந்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை ஆணையர் என்.கோபாலசாமி சிறப்புரை

எஸ்ஆர்எம் அறிவியல்  தொழில்நுட்ப நிறுவனத்தில் (SRMIST- SRM Insitute of Science and Technology) இந்திய தேர்தல் மற்றும் அதன் நிலையான பழங்கதை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.இதில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணயைர் என்.கோபால்சாமி சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவருக்கு எஸ்ஆர்எம் குழுமத்தின் நிறுவனர் வேந்தர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் இந்திய தேர்தல் மற்றும் நிலையான அதன் பழங்கதை ( Indian Election and Enduring Myths )என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஹிப்போகிரேட்ஸ்
அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை துணைவேந்தர் முனைவர் டி.பி.கனேசன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் மற்றும் பெரம்பலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் தலைமை வகித்து  பேசியதாவது:
இந்நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவியருக்கு உலக தரத்திலான உயர்கல்வி வழங்குவது ,அவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்துவது போன்ற வழக்கமான பணிகள் நடைபெற்று வருகிறது.மாறுதலுக்காக மாணவர்களுக்கு கூடுதல் பொது அறிவு வளர்த்து அவர்களை நல்ல குடிமகனாக உருவாக்கும் வகையில் பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழி நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டுவந்த இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி இந்த நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளார். அவரைஎஸ்ஆர்எம் கல்வி குழுமம் சார்பில் வரவேற்கிறேன்.

உலகில் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் முறையை கொண்டதாக இந்திய தேர்தல் ஆணையம் உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விமர்சனங்களை சந்திக்கும் அளவிற்கு நெருக்கடியான சூழ்நிலையில் உள்ளது.நாட்டில் ஏரளமான அரசியல் கட்சிகள் உள்ளன.நாள்தோறும் புதிய புதிய கட்சிகள் உருவாகி வருகின்றன.தேர்தலில் வாக்குபதிவு முறையில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.அது தேவையற்றது ,அதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதுஎன்றும்.வாக்கு சீட்டு முறையில் வாக்களிக்கும் முறை வரவேண்டும் என்ற கட்சிகளின் பல்வேறு  கருத்துக்கள்  இருந்து வருகின்றன.

அதே நேரத்தில் மின்னணு வாக்குபதிவு முறை பாதுகாப்பனது, முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கமளித்து வரும் நிலையில் அது சம்மந்தமாக நம்பகத்தன்மை வெளிபடுத்தவேண்டும்.
தேர்தல் செலவினம் , காலவிரையம் குறைக்க ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற கொள்கை உருவாகியுள்ளது.தேர்தல்  நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவேண்டும்
வாக்குபதிவின்போதுபோது கலவரங்கள் ஏற்படுத்துவது, வாக்குசாவடியை கைப்பற்றுவது போன்ற சம்பவங்கள் ஏற்படாத வகையில் எப்படிசமாளிப்பது என்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று இந்திய தேர்தல் மற்றும் அதன் நிலையானபழங்கதை என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தியதாவது
இந்திய நாடு அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு 1951-52 ஆண்டுகளில் முதன்முதலாக தேர்தல் நடத்தப்பட்டது.அந்த காலகட்டத்தில் ஒரு தொகுதியில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும்.வேட்பாளர்கள் அணைவருக்கும் தனித்தனி வாக்கு பெட்டிகள் வைத்து அதில் வாக்கு சீட்டு முறையில் வாக்களிக்கும் முறை இருந்தது ,அதன்பிறகு எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் ஒரே வாக்கு பெட்டி வைத்து அதில் வாக்களிக்கும் முறை செயல்படுத்தப்பட்டது. தேர்தலில்  வாக்குசீட்டு முறையால் செலவினம் அதிகமாவதுடன் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவு அறிவிக்க அதிக நேரம் ஆவதால் அதனை தவிர்க்க மின்னணு வாக்கு பதிவு கொண்டு வர திட்டமிட்டு 1978,79 ஆண்டுகளில் இரண்டு விதமான மின்னணு வாக்குபதிவு எந்திரங்கள் உருவாக்க ஹைதராபாத்தில் உள்ள இந்திய மின்னணு கழகத்திற்கும், பெங்களுரூவில் உள்ள பாரத மின்னணு நிறுவனத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டு இரண்டு விதமான மின்னணு வாக்கு எந்திரங்கள் உருவாக்கப்பட்டன.பல்வேறு ஆய்வுகளுக்கு பின்பு 1982ம் ஆண்டு கேரள மாநிலத்தில் ஒரு தொகுதியில் நடந்த தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு பரிசார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டது.
தேர்தலில் மின்னணு வாக்கு முறை நடத்த கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்து மின்னணு வாக்கு பதிவு முறைக்கு தேர்தல் ஆணையத்துக்கு தடைவிதித்து வாக்கு சீட்டு முறை பயன்படுத்த உத்தரவிட்டது. மின்னணு வாக்கு எந்திரம் சம்மந்தமாக 3 தொழில்நுட்ப நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்திய நாடாளுமன்ற குழு மின்னணு வாக்குபதிவு பாதுகாப்பனது என்று அறிவித்தது.
அதன் பிறகு மின்னணு வாக்குபதிவு சம்மந்தமான அரசியல் கடசிகளின் கோரிக்கைகளை நீதிமன்றம் ஏற்காமல் தேர்தல் ஆணைய நடவடிக்கைகளில் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்தது.அதை தொடர்ந்து தேர்தலில் மின்னணு வாக்கு பதிவு முறை கொண்டு வரப்பட்டது.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் சுமார் 10லட்சம் வாக்கு சாவடிகளில் மின்னணு வாக்கு எந்திரங்களுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான எந்திரமும்  பயன்படுத்தப்பட்டுஎந்த வித பிரச்சனைகள் இல்லாமல் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டன.மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை அது பாதுகாப்பனது என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மாணவர்களும் இந்திய வின்வெளிஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கிய செயற்கைகோளின் மாதிரியை நினைவு பரிசாக சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசாமிக்கு வேந்தர் டாக்டர் டி.ஆர்.பாரிவேந்தர் வழங்கி பொண்ணாடை அணிவித்து கௌரவபடுத்தினார்.

இதில் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர்கள் விவகார இயக்குநர் முனைவர் கே.ராமசாமி, மருத்துவகல்லூரி டீன் டாக்டர் ஏ.சுந்தரம் ,பேராசிரியர் ராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.முடிவில்  பதிவாளர் பேராசிரியர் என்.சேதுராமன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *