எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவி இலக்கியாவுக்கு பரிசு

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற மாணவி இலக்கியாவுக்கு பரிசு.

காட்டாங்குளத்தூர் :பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே உள்ள பிலிமிசை கிராமத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவி இலக்கியா மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்றார். இலக்கியாவின் பெற்றோர் கூலி வேலை செய்து வருபவர்கள். இந்த மாணவி சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். சர்வதேச கராத்தே போட்டியில் வென்ற மாணவியை பாராட்டும் விதமாக எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் சார்பில் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா. பாரிவேந்தர் அவர்கள் மூன்று லட்சத்திற்கான காசோலையை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார் . மேலும் அவர் பேசுகையில் கராத்தேவை 2020ல் டோக்கியோவில் நடைபெற்ற உள்ள ஒலிம்பிக் போட்டியில் ஒரு விளையாட்டாக சேர்க்கபட உள்ளது. இந்த மாணவி மேலும் பல வெற்றிகளை பெற மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.இந்த பரிசு 2024ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்த மாணவி கலந்து கொண்டு தங்கம் வெல்ல ஒரு ஊக்குவிப்பாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed