ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் செல் போன் திருட்டு – பொதுமக்கள் திருடனை பிடித்து போக்குவரத்து காவலர்களிடம் ஒப்படைப்பு

ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் செல்போன் திருட்டுபொதுமக்கள் திருடனை பிடித்து போக்குவரத்து காவலர்களிடம் ஒப்படைப்பு

பெரம்பூர் :
மாநகர பேருந்து தடம் எண் 57 -எப் காரனோடையில் இருந்து சென்னை உயர் நீதிமன்றம் நோக்கி செல்லும் போது மூலக்கடை அருகே எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வரும் போது அதே பஸ்ஸில் கல்லூரிக்கு பயணம் செய்து கொண்டு இருந்த தனலட்சுமி என்ற கல்லூரி மாணவி வைத்திருந்த செல்போனை கூட்ட நெரிசலில் திருடிவிட்டனர். செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவி சத்தம் போட்டதில் உடனே பஸ் கண்டக்டர் பஸ்சை ஓரம் நிறுத்தி பயணிகளிடம் சோதனை போட்டபோது பஸ்சில் பயணம் செய்த தண்டையார் பேட்டையை சேர்ந்த சிவகுமார் வயது 48 என்பவர் செல்போன் திருடி வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே பஸ் கண்டக்டர் பொது மக்களின் உதவியுடன் அங்கிருந்த போக்குவரத்து போலீஸாரிடம் பிடித்து கொடுத்தனர். அவரிடம் விசாரணை செய்தபோது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டான்.
அவன் கொடுங்கையூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இவர் மீது கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *