ஓட்டேரியில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனங்களை சேதபடுத்திய சிறுவர்கள்

ஓட்டேரியில் கஞ்சா  போதையில் இருசக்கர வாகனங்களை சேதபடுத்திய சிறுவர்கள் 

சென்னை ஓட்டேரி, பழைய வாழைமாநகரில் அப்பகுதிவாசிகளால் நிறுத்தி வைக்கபட்டிருந்த 30 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களின் சீட்டை சேதப்படுத்தியதாக ஓட்டேரி போலீசில் புகார் கொடுக்கபட்டது.
போலீசார் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து அதே பகுதியை சேர்ந்த மதன் (வயது 20) மற்றும் 2 சிறுவர்களை பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் கஞ்சா போதையில் சீட்டை சேதப்படுத்தியதாக அவர்கள் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து மதனை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் 2 சிறுவர்களை சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு போலீசார் அனுப்பி வைத்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *