சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் சார்பில் உலக சாதனை முயற்சி

சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் சார்பில் உலக சாதனை முயற்சி

சென்னை : சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் சார்பில் தாம்பரம் பள்ளி மாணவி எஸ்.ஆர் இமயவள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டி ஒரு மணி நேரம் சிலம்பம், சுருள்வாள் மற்றும் கத்தி போன்றவற்றை சுழற்சி உலக சாதனை முயற்சி செய்யும் நிகழ்ச்சி தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் பி. சத்தியா அவர்கள் தலைமையேற்க, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு கடம்பூர் கே.ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்நிகழ்வை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

முனைவர் திருமதி தி. மகாலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.ஆல்பா சிட்டி லயன்ஸ் சங்க சாசன தலைவர் லயன்ஸ் செ.தியாகராஜா, ஆன்மீக பணியாளர் ஆத்மா ரகுபதி, தொழிலதிபர் ஆதி பாலசுப்பிரமணியம்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு க.குமார்,ஆசான் துரோணர் சிலம்பம் அகாடமியின் நிறுவனர் ஆசான் எஸ்.ஜே.அருண் கேசவன், தமிழ்நாடு சைக்கிள் போலோ அசோசியேஷன் செயலாளர் ரமேஷ் குமார், குண்டூர் சுப்பையா பிள்ளை தி.நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.இரா. இராஜலட்சுமி, மக்கள் வெளிச்சம் நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஆர்.எஸ் பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகத்தின் நிறுவனர் யோகா சுரேஷ் என்கிற எஸ்.சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பான தொகுப்புரை வழங்கினார். முனைவர் திருமதி தி.மகாலட்சுமி நன்றியுரை ஆற்றினார்.விழா ஏற்பாடுகளை பி.எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *