சென்னையில் பிரபல ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் இளம் செய்தியாளர் தற்கொலை! 

 

சென்னையில் பிரபல ஊடக நிறுவனத்தில் பணிபுரியும் இளம் செய்தியாளர் தற்கொலை!   காதலித்த பெண் வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்து விகடன் குழுமத்தின் இளம் நிருபர் மீனாட்சி சுந்தரம்(வயது 27) தற்கொலை செய்துகொண்டார்

ஆனந்த விகடன் இதழில் கடந்த ஐந்து வருடங்களாக நிருபர் பணியில் இருந்தவர் இளம் நிருபர் மீனாட்சிசுந்தரம்.  இவர்,  லயோ கல்லூரியில் 2012ம் ஆண்டில் எம்.ஏ. மீடியா படித்தபோது,  அதே கல்லூரியில் பி.எஸ்.சி விஸ்காம் மாணவியை பழகி பின்னர் அது காகலாக மாறியுள்ளது.  இருவரும் கடந்த 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், காதலி வேறு ஒரு நபருடன் பழகியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.  பிரிந்த நிலையிலும்,  அடிக்கடி மீனாட்சி சுந்தரத்திற்கு வாட்ஸ் அப் மூலமாக படங்களூம்,  குறுஞ்செய்திகளும் அனுப்பி வந்துள்ளார் அந்தப்பெண். இந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக அந்தப்பெண் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு,  அந்த திருமண படங்களை மீனாட்சி சுந்தரத்திற்கு அனுப்பியுள்ளார்.  இந்த புகைப்படங்களை கண்டது முதல் மன உளைச்சலில் இருந்துள்ளார் மீனாட்சி சுந்தரம்.  மன உளைச்சல் அதிகமாகி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாயின் சேலையினால் மின்விசிறியில் தூங்கிட்டு தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகனை காதலித்து ஏமாற்றி விட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும்,  அந்தப்பெண் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மீனாட்சி சுந்தரத்தின் தாயார் மஞ்சுளா  தரமணி ஜே-13 காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *