சென்னையில் பிரபல குளிர்பான நிறுவனமான 7 அப் பொன்னான நேரம் என்ற பிரச்சாரம் அறிமுகம்

சென்னை : மிகச்சிறந்த தாகம் தீர்க்கும் பானமான 7-அப் சென்னையில் புதிய பிரசாரத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மணி நேரமும் தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பையும் பெறலாம்.  உங்களுடைய நேரம் சரியானதாக இருந்தால், நீங்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும். இத்தகைய புதிய பிரசாரத்தை 7-அப் அறிமுகப்படுத்தியுள்ளது. உற்சாகமூட்டும் எலுமிச்சை புத்துணர்ச்சி பானமான 7-அப் பொன் நேரம் என்ற புதிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.
இந்தப் புதிய பிரசாரத்தை நடிகை காஜல் அகர்வால் அறிமுகப்படுத்தினார். சென்னை இராயபேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவெென்யூ மாலில்  இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நம்முடைய நேரம் சரியானதாக இருந்தால் அனைத்தும் தானாக சரியாக நடந்தேறும் என்ற கருத்துடன் அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் மேலும் பேசியது:-
சென்னையில் 7-அப் பொன் நேரம் பிரசாரத்தைத் தொடங்கி வைப்பதில் மிகுந்த பரவசம் அடைகிறேன். 7-அப் குளிர்பானம் மிகுந்த குளிர்ச்சியும், இளமையும் ததும்பும் பானமாகும். இது பொன் நேரம் என்ற புதிய பிரசாரத்தை முன்வைத்துள்ளது. உங்களுடைய நேரம் சரியானதாக இருந்தால் நீங்கள் உற்சாகத்துடனும், வெற்றியையும் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருப்பீர்கள். இதனை நான் எப்போதும் நம்புகிறேன். மேலும், அனைத்து தருணங்களிலும் இதனையே எனது மனதில் தீர்க்கமாகக் கொண்டிருக்கிறேன் என்றார்.
பொன் நேரம் பிராண்டுகளைக் கொண்ட 7-அப் பாட்டில்களை நடிகை காஜல் அகர்வாலும், பெப்சிகோ இந்தியாவின் இணை இயக்குநர் அனுஜா மிஸ்ராவும் இணைந்து மேடையில் அறிமுகப்படுத்தினர்.
இதுகுறித்து, அனுஜா மிஸ்ரா கூறுகையில், 7-அப் பிராண்டுக்கு தென் இந்தியா எப்போதும் முக்கியமான சந்தையாக விளங்கி வருகிறது. 7அப் குளிர்பானம் எப்போதும் தனது பிராண்டை வாடிக்கையாளர்களிடையே வித்தியாசமான முறையில் கொண்டு சேர்க்கிறது. இன்றைய வேகமான உலகில் வாடிக்கையாளர்களும் அதே அளவு வேகத்துடன் இருப்பது எங்களுடைய ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது. இதனை மனதில் கொண்டே பொன் நேரம் என்ற புதிய பிரசாரம் தோன்றியது. சென்னையில் பொன் நேரம் பிரசாரத்தைத் தொடங்கும் இந்தத் தருணத்தில் நடிகை காஜல் அகர்வால் எங்களுடன் இருப்பது பரவசத்தை ஏற்படுத்துகிறது. எங்களது புதிய பிரசாரத்துக்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பைத் தருவார்கள் என நம்புகிறோம்.
இதைத் தொடர்ந்து, 7-அப்பின் தங்கப்பட்டாளம் என்ற தங்கமனிதர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 7-அப் பொன் நேரம் பிரசாரமானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்தக் காலத்தில் ஒவ்வொரு மணி நேரத்திலும் தங்கத்தை வாடிக்கையாளர்கள் வெல்லும் வாய்ப்பு ஏற்படும். மேலும், டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 கிராம் தங்க நாணயம் மெகா பரிசாக அளிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *