சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், இந்தியாவிலேயே முதல் முறையாக குறைந்த பட்ச துளையிடும் கலப்பு மறுகுழல்மயமாக்கல்  அறுவை சிகிச்சை ரோபோட்டிக் முறையில்  செய்து சாதனை

சென்னை அப்பல்லோ


மருத்துவமனையில்,


இந்தியாவிலேயே முதல்


முறையாக குறைந்த பட்ச


துளையிடும் கலப்பு


மறுகுழல்மயமாக்கல்


  அறுவை சிகிச்சை


ரோபோட்டிக் முறையில்


 செய்து சாதனை

சென்னை: ஆசியாவின் மிக நம்பகமான மற்றும் பெரிய பன்னோக்கு மருத்துவமனை குழுமமான அப்பல்லோவில் சென்னை மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல் முறையாக குறைந்த பட்ச துளையிடும் முறையிலான கலப்பு மறுகுழல் மயமாக்கல் (ஹைப்ரிட் ரீவாஸ்குலரைசேஷன்) அறுவை சிகிச்சை ரோபோட்டிக் முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று வெசல் இரத்தக் குழாய் தமனி அடைப்பை சரி செய்யவும் இதயத்துக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நவீன முறையின் மூலம் சென்னையைச் சேர்ந்த 63 வயது பெண் ஒருவருக்கு புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச துளையிடும் கலப்பு மறுகுழல்மயமாக்க அறுவை சிகிச்சை (ஹைப்ரிட் ரீவாஸ்குலரைசேஷன்) என்பது குறைந்த அளவில் துளையிட்டு ரத்தக் குழாய் தமனியில் பைபாஸ் அறுவை சிகிச்சை (சிஏபிஜி) செய்வதுடன் ஆன்ஜியோகிராபி ஸ்டென்டிங் நடைமுறையையும் மேற்கொள்வதாகும். இதன் மூலம் ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு நீக்கப்பட்டு இதயத்துக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும்.

சென்னையைச் சேர்ந்த திருமதி. மல்லிகா என்ற 63 வயது பெண்ணுக்கு, 6 மாதத்திற்கும் மேலாக நெஞ்சு வலி அடிக்கடி வந்தது, அவர் மோசமான நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு பிப்ரவரி 18 ஆம் தேதி அன்று அழைத்து வரப்பட்டார். பரிசோதித்ததில் இதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயில் இரண்டு அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது போன்ற கடுமையான வெசல் ப்ளாக்கேஜ் அதாவது ரத்தநாள அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு பெரும்பாலும் பாரம்பரியமான பைபாஸ் அறுவை சிகிச்சையே மேற்கொள்ளப்படும். மைய மார்பின் எலும்பில் பிளவு ஏற்படுத்தப்பட்டு இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுவது வழக்கம். இதனால் அறுவை சிகிச்சைக்குப் பின் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட நாட்கள் ஆகும். அதாவது அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப 3 முதல் 4 மாதங்கள் ஆகும்.

அப்பல்லோ மருத்துவமனையில் குறைந்த பட்ச துளையிடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்எம் யூசுஃப் மற்றும் அவரது குழுவினர், அந்த பெண்ணுக்கு பாரம்பரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் குறைந்தபட்ச துளையிடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்தனர். ரோபோவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த குறைந்தபட்ச துளையிடல் கலப்பு மறுகுழல்மயமாக்கல் அறுவை சிகிச்சையின்போது இதயம் துடிக்கும்போது மார்பகத்தில் மத்தியில் சிறு கீறல் இடப்படும். அதிக திறன் கொண்ட நுண் கேமரா மற்றும் மானிட்டர் (தோராஸ்கோப்) உதவியுடன் இது செய்யப்படும். இதயத்தின் மைய எலும்பில் பிளவு ஏற்படுத்தாமல் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் இதன் மூலம் நோயாளி எளிதிலும் விரைவிலும் இயல்பு நிலைக்குத் திரும்ப இயலும்.

டாக்டர் எம்எம் யூசுப் மற்றும் அவரது குழுவினர் இந்த சிகிச்சை முறையை தனித்துவமான இரண்டு படிநிலைகளில் வெற்றிகரமாகச் செய்துள்ளனர். நோயாளிக்கு பிரதானமான மூன்றில் இரண்டு ரத்தநாள தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதால் இதய செயல்பாடு மிகவும் குறைந்து இருந்தது. மேலும் அந்த பெண்ணுக்கு சில ரத்தநாளங்களிலும் அடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதை அறுவை சிகிச்சையின் மூலமோ ஆன்ஜியோகிராபி ஸ்டெண்ட் வைப்பதன் மூலமோ குணப்படுத்த இயலாது. அந்த பெண்ணுக்கு பாரம்பரிய அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் டாக்டர் யூசுஃப் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பெல்ஜியத்தன் ஆல்ஸ்டில் உள்ள ஓஎல்வி மருத்துவமனையின் ரோபோடிக் மற்றும் குறைந்த பட்ச துளையிடும் முறையிலான இதய அறுவை சி்கிச்சைப் பிரிவுத் இயக்குநர் டாக்டர் ஃப்ராங்க் வான்ப்ரீத் வழிகாட்டுதல்படி, ரோபோவைப் பயன்படுத்தி குறைந்தபட்ச துளையிடல் சிஏஜிபி சிகிச்சை மேற்கொண்டனர். இந்த நடைமுறை நோய்த் தன்மையை நீக்கியதுடன் விரைந்த குணமடைதலுக்கும் உதவியாக அமைந்தது.

இந்த நடைமுறைகள் குறித்து விளக்கிய டாக்டர் யூசுஃப், “என்டோஸ்கோப்பிக் குறைந்தபட்ச துளையிடல் சிஏபிஜி அறுவை சிகிச்சை என்பது இதய சுவரில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சையாகும். சிறிய அளவில் அதாவது 4 முதல் 5 சென்டி மீட்டர் அகலத்துக்கு இடது மார்புக் காம்புக்குக் கீழ் துளையிட்டு இந்த சிகிச்சை செய்யப்படும். இந்த முறையில் சிக்கல்கள் மிகக் குறைவு. இந்த நவீன சிகிச்சையின் மூலம் நோயாளிகளுக்கு வலி மிகக் குறைவாக இருக்கும். சிறிய தழும்புகள், குறைந்த காலமே மருத்துவமனையில் தங்கி இருந்தால் போதுமானது என்ற நிலை, விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்புதல் போன்ற பல்வேறு நல்ல அம்சங்கள் இந்த நவீன சிகிச்சை முறையில் உள்ளன.” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இருபடி நிலை சிகிச்சையாக அந்த நோயாளி, ஆன்ஜியோகிராபி மற்றும் டிரக் எலுடிங் ஸ்டென்ட் பொருத்துதல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்பட்டார். தமனியில் இருந்த மற்ற இரண்டு அடைப்புகளை சரி செய்ய இன்ட்ரா வாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் வழிகாட்டுதலுடன் இது மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சையை அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த இதய நோய் மருத்துவர் தாமோதரன் மேற்கொண்டார். அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் பொருத்தப்பட்ட பிறகு நோயாளியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். மேலும் அவர் 48 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பினார்.” என்றார்.

ரோபோ உதவியுடனான சிஏபிஜி சிகிச்சையானது, இதய அறுவை சிகிச்சை நடைமுறையில் குறைந்த பட்ச துளையிடல் சிகிச்சை முறையாகும். ரத்த இழப்பு, வலி ஆகியவை இதில் பெரும்பாலும் இருக்காது. மேலும் மருத்துவமனையில் தங்கி இருக்கும் காலம் மிகக் குறைவு. விரைந்து குணம் அடைந்து வீடு திரும்ப முடியும். ரத்தக் குழாய்களில் பல இடங்களில் அடைப்பு உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த முறை மிக ஏற்றதாக இருக்கும். நோயாளிகள் இந்த சிகிச்சை செய்து கொண்ட பின் அடுத்த இரண்டு வாரங்களில் முழு இயல்பு நிலைக்குத் திரும்பலாம்.

டாக்டர் முகமது யூசுஃப் மற்றும் அவரது குழுவினர் முன்னதாக 2018-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாக குறைந்த பட்ச துளையிடும் கலப்பு மறுகுழல்மயமாக்கல் எனப்படும் ஹைப்ரிட் ரீ வாஸ்குலரைசேஷன் அறுவை சிகிச்சையை (ரோபோ உதவியின்றி) மேற்கொண்டனர். அதன் மூலம் மூன்று ரத்தநாள அடைப்பு (ட்ரிப்பிள் வெசல் ப்ளாக்கேஜ்) ஏற்பட்டு இருந்த 53 வயது நோயாளி ஒருவர் காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்பல்லோ மருத்துவமனைகள் பற்றி:

1983-ம் ஆண்டு, சென்னையில், இந்தியாவின் முதல் கார்பொரேட் ஹாஸ்பிடல்லாக அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்களால் தொடங்கப்பட்டது. அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் சேவைகளின் மூலம் இதுவரையிலான காலத்தில், இந்தியாவில் இதயம் தொடர்பான சிகிச்சைகளுக்கான ப்ரத்யேக மருத்துவமனையாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது.  இதுவரை அப்பல்லோ மருத்துவமனைகளில்  இந்தியாவிலேயே அதிக அளவாக 1,60,000 இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதற்கான சான்றாக விளங்குகிறது.  புற்று நோய் சிகிச்சை அளிப்பதில் அப்பல்லோ மருத்துவமனை உலகின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனையாக திகழ்கிறது.  உறுப்பு மாற்று சிகிச்சை அளிப்பதிலும் இந்த மருத்துவமனை உலகில் முன்னணி மருத்துவமனையாகத் திகழ்கிறது.

ஆசியாவின் மிகப் பெரிய மற்றும் மிக நம்பகமான மருத்துவ குழுமமாக அப்பல்லோ குழுமம் திகழ்கிறது.  தற்போது இதன்  64 தொடர் மருத்துவமனைகளில் 9215 – படுக்கைகள் உள்ளன. 2,500  மருந்தகங்கள், 90  ஆரம்ப சிகிச்சை மையங்கள் மற்றும் பரிசோதனைக் கூடங்களும் உள்ளன. 110-க்கும் மேற்பட்ட தொலை மருத்துவ மையங்களும் 80-க்கும் மேற்பட்ட அப்பல்லோ முனிச் இன்சூரன்ஸ் கிளைகளும் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ளன.

மருத்துவ காப்பீடு உட்பட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை அப்பல்லோ வழங்கி வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்வி மையங்கள் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவையும் உள்ளன. இவற்றில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆய்வு நிறுவனத்தில் உலக அளவிலான மருத்துவ சேவை சோதனை முயற்சிகள், ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மரபணு ஆய்வு உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் முறையாக ப்ரோட்டான் தெரபி மையத்தை ஆசியா, அப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவில் சென்னை ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தி புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது. இந்தியாவில் சென்னையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான இதயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த அப்பல்லோ மருத்துவமனை அயராது பாடுபட்டு வருகிறது. ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான செலவில், சர்வதேசத் தரத்தில் தரமான ஆரோக்கியப் பராமரிப்பு சேவைகளை அப்பல்லோ வழங்கி வருகின்றது. அப்பல்லோ குழுமம், இதய ரத்தநாள (கார்டியோ வாஸ்குலர்) நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இந்தியாவில் முன்னோடியாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு நான்கு நாட்களிலும் அப்பல்லோ மருத்துவமனை குழுமம் தனது உலகத்தர மருத்துவச் சேவைகளின் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 10 லட்சம் மக்களை ஏதோ ஒரு வகையில் சென்றடைகிறது.

இந்திய அரசாங்கம், நம் நாட்டின் மருத்துவ துறையில் அப்பல்லோ மருத்துவமனையின் பங்களிப்பை அடையாளம் கண்டு கெளரவிக்கும் வகையில் அப்பல்லோ மருத்துவமனை நினைவு தபால் தலையை வெளியிட்டுள்ளது.  இது மிக அரிதாக வழங்கப்படும் கவுரவம் ஆகும். மருத்துவமனை ஒன்றுக்கு இந்த கவுரவம் கிடைத்தது இதுவே முதல் முறை.அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டிக்கு மத்திய அரசு  2010-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்கி வருவது, மருத்துவ கண்டுபிடிப்புகளில் முக்கியத்துவமான இடத்தை தக்கவைத்திருப்பது, அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது போன்றவற்றில் அப்பல்லோ மருத்துவமனை முன்னணி வகிக்கிறது. மேம்பட்ட மருத்துவ சிகிச்சைகள் மற்றும் ஆய்வுகளில்  அப்பல்லோ குழுமம் உலக மருத்துவமனைகள் பட்டியலில் தரவரிசையில் தொடர்ந்து முன்னணி இடம் வகித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *