சென்னை பெருங்குடியில் ஜெம் மருத்துவமனை துவக்க விழா

சென்னை பெருங்குடியில் ஜெம் மருத்துவமனை  துவக்க விழா கோவையை மையமாகக் கொண்ட குடலியல், ஜீரண மண்டல மற்றும் லேப்ராஸ்கோபிக் சிறப்பு மருத்துவமனை, சென்னையில் தனது மருத்துவமனையை துவக்கியுள்ளது. சென்னை பெருங்குடி எம்ஜிஆர் ரோட்டில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையை, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் துவக்கி வைத்தார்.

மேலும் விழாவில், தமிழ்நாடு அரசு, மாண்புமிகு ஊரக மற்றும் திட்ட அமலாக்க துறை அமைச்சர் திரு. எஸ்.பி வேலுமணி, மீன்வளம் மற்றும் மனிதவள, நிர்வாக சீரமைப்பு துறை அமைச்சர் திரு. டி. ஜெயக்குமார், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.துவக்க விழாவில், ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு பேசுகையில், ‘‘ ஜெம் மருத்துவமனை, இந்தியாவிலேயே குடல், மற்றும் ஜீரண மண்டல நோய்க்காக துவக்கப்பட்ட முதல் மருத்துவமனை. குடல் புற்றுநோய்கள், குடலிறக்கம், உடல் பருமன், கல்லீரல் பிரச்னைகள் போன்றவைகளுக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை போன்றவைகளை மேற்கொண்டு வருகிறது. ஜெம் மருத்துவமனை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டினால் முறைகளால், தீர்க்க முடியாத பல குடல்நோய்களையும் தீர்த்து வைத்துள்ளது. இந்த மருத்துவமனை, ஜீரணமண்டலம் மற்றும் குடல்நோய், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகளை உலகத்தரத்தில் மேற்கொண்டு வருகிறது”.

“பொதுமக்களிடையே வயிற்று கோளாறுகள் அதிகம் உள்ளன. புற்றுநோய், மஞ்சள் காமாலை, கல்லீரல் பிரச்னை, அல்சர், பொளத்திரம், மூலநோய் போன்றவை பொதுவாக காணப்படுகின்றன. கல்லீரல், இரைப்பை, உணவுக்குழாய் போன்றவைகளில் சிக்கலான பிரச்னைகள் உருவாகின்றன. இவற்றுக்கு 1980ம் ஆண்டுகளுக்கு முன் எவ்வித முறையான சிகிச்சையும் இல்லை. அப்போதெல்லாம் அடி வயிற்றை கிழித்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையால் மக்கள் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை இருந்தது. காயங்கள் குணமடைய நீண்ட நாட்கள் ஆனதால், தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் நாட்களானது. ரத்த இழப்பும் அதிகமாக இருந்தது. இந்த சமயத்தில் தான், சர்வதேச அளவிலும், இந்தியாவின் பெருநகரங்களிலும் தென்னிந்திய அளவிலும் ஜெம் மருத்துவமனை, முதல் முறையாக துளையிட்டு சிகிச்சை அளிக்கும் முறையான லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்தது. லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை, எவ்வித காயமும் இல்லாமல் துளையிட்டு மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகளுக்கு வலி இல்லாமல், குறைந்த நாட்களே மருத்துவமனையில் தங்கி, விரைவாக குணமடைந்து வீடு திரும்ப விரைவான சிகிச்சையாக இது அமைந்தது. பொதுமக்களின் நலன் கருதி, குறைந்த செலவில் ஜெம் மருத்துவமனை இந்த சிகிச்சையை அளித்தது. அதோடு நாடு முழுவதும் உள்ள அறுவை சிகிச்சையாளர்களுக்கு பயிற்சியும் அளித்தது,’’ என்றார். சென்னை ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் எஸ். அசோகன் பேசுகையில், ‘‘சென்னையில் துவக்கப்பட்டுள்ள ஜெம் மருத்துவமனை, 200 படுக்கை வசதிகளை கொண்ட, குடல்நோய் சிறப்பு மருத்துவமனை. 3டி, 4கே அதிநவீன லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோட்டிக் அறுவை மையத்தை கொண்டது. 11 வகையான அதிநவீன அறுவை சிகிச்சை தியேட்டர்கள், 25 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, மருத்துவ அவசர பிரிவு போன்றவைகளை கொண்டுள்ளது. டா வின்சி ரோபாட்டிக் அறுவை சிகிச்சை வசதியும், ஒருங்கிணைந்த வயிற்று புற்றுநோய் கவனிப்பு மற்றும் மருத்துவ கதிர்வீச்சியில் சிகிச்சை வசதிகளையும் கொண்டது. கதிர்வீச்சு மற்றும் குறைந்தபட்ச கருவிகளைக் கொண்ட லேப்ராஸ்கோபிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை வசதிகள் உள்ளிட்டவை இங்குள்ளன” என்றார்.

“டாக்டர் பழனிவேலு அவர்கள் கடந்த 28 ஆண்டு அனுபவங்களைக் கொண்டு வயிற்றின் பல்வேறு பாகங்களைக் கொண்ட துறைகளை உருவாக்கியுள்ளார். உணவுக்குழாய், கல்லீரல், இரைப்பை, மலக்குடல் அறுவை சிகிச்சை உள்ளிட்டவை சென்னை ஜெம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும். உடல் பருமன், வளர்சிதை மாற்றத்துக்கான அறுவை சிகிச்சை, கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய்க்கான சிகிச்சை, பெருமளவிலான உடல் பருமன், குறைந்தபட்ச கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை, குடலிறக்கத்துக்கான சிகிச்சை, கர்ப்பப்பை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை போன்றவைகளும் இங்குள்ளன. அதிநவீன என்டோஸ்கோபிக் மையம் மற்றும் 24 மணி நேரம் அதிவிரைவு தீவிர சிகிச்சை மையம், போன்றவைகளும் உள்ளன. அதிநவீன தீவிர சிகிச்சை பிரிவில் கல்லீரல் செயலிழத்தல் மற்றும் குடல்வால் நோய்க்கான சிகிச்சைகளும் உள்ளன,’’ என்றார்.ஜெம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பி.செந்தில்நாதன் பேசுகையில்,‘‘ அதிநவீன சிகிச்சைக்கும், நோயை முன் கூட்டியே அறிந்து, ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கவும் சிறப்பு மருத்துவமனைகள் அவசியமாகிறது. வயிறு தொடர்பான பிரச்னைகளை முன்கூட்டியே அறியவும், பரிசோதனைகளை மேற்கொள்ளவும் ஜெம் மருத்துவமனை பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. ஜெம் டெலிவெர்சிட்டி, பல்வேறு கல்வி திட்டங்களை நடத்துவதோடு, அறுவை சிகிச்சை முறையில் ஏற்படும் மாற்றங்களையும் பயிற்சியாக அளித்து வருகிறது. இங்கு அமைந்துள்ள இந்த மருத்துவமனை, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, வெளிமாநிலத்தவர்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது,’’ என்றார்.டாக்டர் சி. பழனிவேலு அவர்கள் பற்றி:          ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை முன்னோடி நிபுணர் டாக்டர் பழனிவேலு. தென்னிந்திய அளவில் முதல் முறையாக துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் லேப்ராஸ்கோபிக் முறையை அறிமுகம் செய்தவர். இதில் பல்வேறு புதுமை முறைகளையும் கண்டறிந்தவர். தேசிய அளவில் மத்திய அரசு வழங்கும் பிசி ராய் தேசிய விருது பெற்ற டாக்டர்களில் ஒருவர். இருமுறை இந்த விருதினை பெற்றுள்ளார். சமீபத்தில் பிரிட்டிஷ் பார்லிமென்ட் விருதையும் பெற்றுள்ளார். சிறந்த மருத்துவர் என்ற உயர்வான விருதை 2015ல் பெற்றுள்ளார். தேசிய அளவில் ஒரே ஒரு டாக்டர் மட்டுமே இந்த விருதை ஒவ்வொரு ஆண்டும் பெறுகின்றனர். அமெரிக்காவில் போனிக்ஸ் நகரில் நடந்த மருத்துவ சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். லேப்ராஸ்கோபிக் சிகிச்சைக்கு சிறந்த பங்களிப்புக்கான விருதினை பெற்றுள்ளார்.அறுவை சிகிச்சை பற்றிய புத்தகங்களை எழுதியுள்ளார். இந்தியாவிலிருந்து முதல் முறையாக அறுவை சிகிச்சை நுால்கள், வேறு மொழிகளான ஸ்பானிஷ், சீனா, கொரிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நுால்கள் இவரது புத்தகங்கள். இவை பாடத்திட்டங்களிலும் இடம் பெற்றுள்ளன.                                      ஜெம் மருத்துவமனை பற்றி:குடல்நோய் மருத்துவ மையம் என்பதை குறிக்கும் வகையில் ‘ஜெம்’ என்ற பெயர் உருவாக்கப்பட்டள்ளது. ஜெம் மருத்துவமனை, இந்தியாவிலேயே குடல், மற்றும் ஜீரண மண்டல நோய்க்காக துவக்கப்பட்ட முதல் மருத்துவமனை. குடல் புற்றுநோய்கள், குடலிறக்கம், உடல் பருமன், கல்லீரல் பிரச்னைகள் போன்றவைகளுக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை மற்றும் ரோபோட்டிக் அறுவை சிகிச்சை போன்றவைகளை மேற்கொண்டு வருகிறது. ஜெம் மருத்துவமனை, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டினால் முறைகளால், தீர்க்க முடியாத பல குடல்நோய்களையும் தீர்த்து வைத்துள்ளது. இந்த மருத்துவமனை, ஜீரணமண்டலம் மற்றும் குடல்நோய், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை முறைகளை உலகத்தரத்தில் மேற்கொண்டு வருகிறது. முதல் முறையாக ஐஎஸ்ஓ 9001: 2008 சான்று பெற்றது. தேசிய மருத்துவ பரிசோதனை கூட்டமைப்பின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்த மருத்துவமனை, கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் சென்னை, கேரளாவில் திருச்சூரிலும் செயல்பட்டு வருகிறது.இது வரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. 7500 லேப்ராஸ்கோபிக் புற்று நோய் அறுவை சிகிச்சையும்,18,000 குடலிறக்க நோயை சரி செய்துள்ளது. கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் 3500 உடல் பருமன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *