சொத்து தகராறில் தாயை படுகொலை செய்த மகன்… தப்பி ஓடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!

சொத்து தகராறில் தாயை படுகொலை செய்த மகன்… தப்பி ஓடிய மகனுக்கு போலீஸ் வலைவீச்சு!

சென்னை:சங்ககிரியை பூர்வீகமாக கொண்டவர் ரத்தினம்(63). இவர் சென்னை பெசன்ட் நகர் பீச் சாலையில் உள்ள தனது மகன் பிரவீன் (36) வீட்டிற்கு நேற்று காலை வந்தார். இரவு இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மகன் பிரவீன் தன் தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொடூரமாக படு கொலை செய்துள்ளார்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்தினத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ரத்தினத்தின் மகன் பிரவீன் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருகிறார். அவருக்கு அங்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக சொத்துப் பிரச்சினை காரணமாக பிரவீன் தமிழகம் வந்துள்ளார்
இவர் தற்போது பெசன்ட் நகர் கடற்கரை அருகில் உள்ள தனது வீட்டில் தங்கி இருந்திருக்கிறார். சொத்து பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தாய் ரத்தினம் திருப்பூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து நேற்று காலை தான் மகனைச் சந்திப்பதற்காக பெசன்ட் நகர் வந்துள்ளார்.
சொத்துப் பிரச்னையை பேசித் தீர்க்கும் போது பிரச்சனை பெரிதாக மாறி இருக்கிறது. இதனால் நேற்று இரவு 10.00 மணியளவில் அளவில் பிரவீன் தன் தாய் ரத்தினத்தை கழுத்தை நெரித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார் என்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் தாயை படுகொலை செய்து விட்டு தப்பி ஓடிய மகனை தேடும் பணியில் சாஸ்திரிநகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *