டான்போஸ்கோ இளையோர் மையத்தின் பவள விழா ஆண்டை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா!

டான்போஸ்கோ இளையோர் மையத்தின் பவள விழா ஆண்டை  முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டி பரிசளிப்பு விழா!   

சென்னை பிராட்வே பகுதியில் அமைந்ததுள்ள டான்போஸ்கோ இளையோர் மையத்தின் பவள விழா ஆண்டை முன்னிட்டு இளைஞர்களுக்கான கால்பந்தாட்டப்போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் டான்போஸ்கோ இளையோர் மையத்தை சேர்ந்த பேசின் பிரிட்ஜ்,வியாசர்பாடி, பிராட்வே,கீழ்பாக்கம்,காட்பாடி அணிகள் பங்கேற்றன. இதில் முதல் பரிசை பேசின்பிரிட்ஜ் அணி தட்டிச்சென்றது.
பிராட்வே டான்போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்
அருட்தந்தையர்கள் ராஜன்,டான்போஸ்கோ ஆகியோர் விளையாட்டு போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை வென்ற அணிகளுக்கும் ஆட்ட நாயகன்,கோல் கீப்பர்,பயிற்சியாளார்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை விளையாட்டு கமிட்டி தலைவர் அருட்தந்தை ராஜன்புஷ்பம், துணைத்தலைவர்கள் அருட்தந்தையர்கள் கில்பர்ட்,ராபர்ட் ஆண்டனி,உதவி இயக்குனர் ஜான்போஸ்கோ, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் டேவிட்,உதவி ஒருங்கிணைப்பாளர் ராக் சகாயராஜ்,பொதுச்செயலாளர் திவாகரன்,விளையாட்டுச் செயலாளர் திருமால்,நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஞானபிரகாசம், ராஜேந்திரன்,பிரகாசம்,பாலசுந்தரம்,சூசைராஜ்,ராபின்,அமல்ராஜ்,ஆரோக்கியதாஸ், ஆனந்த்,சங்கர், குணசீலன்,ராபின்சன்,சத்யசீலன் ,குமரேசன்,உறுப்பினர்கள்குணராஜ்,ராஜேஸ், சுரேஷ்,சரண்ராஜ், ஜேம்ஸ்,தேவராஜ்,அண்ணாத்துரை, சுந்தரம்,ராஜேஸ்குமார், மோகன்,அருண்பாரத்,கவுதம், கோபி,ராகுல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed