தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மாபெரும் பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் மாபெரும் பேரணி

புதுப்பேட்டை : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரவாதத்தை நாட்டை விட்டே விரட்டிடுவோம், பயங்கரவாதத்தை வேரறுப்போம், பயமில்லா வாழ்விற்கு பாதை அமைப்போன்ற போன்ற கோஷங்களோடு தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் பேரணி மாநில துணைத் தலைவர் அப்துல் ரகுமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
                                இந்த பேரணியை சென்னை புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையிலிருந்து பொதுச்செயலாளர் முகமது அவர்கள் துவக்கி வைத்தார் மேலும் இந்த பேரணியில் துணைப்பொதுச்  செயலாளர் ஏ.கே.அப்துல் ரஹீம், மாநிலச் செயலாளர்கள் ஐ. அன்சாரி .காஞ்சி ஏ. இப்ராஹீம்,வட சென்னை மாவட்ட தலைவர் சாகுல், தென் சென்னை மாவட்ட தலைவர் ஹபிபுல்லா, காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் அல்-அமீன், காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் அமானுல்லாஹ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் முகமது இப்ராஹீம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மாலிக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
           மேலும் இந்த பேரணி ஆல்பர்ட் திரையரங்கம் அருகே நிறைவு பெற்றது .மாநிலதலைவர்எம்.ஷம்சுல்லுஹா  அவர்கள் முஸ்லீம் சமுதாயத்திற்கு எதிரான தீவிரவாத செயல் குறித்து சிறப்புரையாற்றினார். இந்த பேரணியில் திறளான இஸ்லாமிய பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்-சிறுமியர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டு தீவிரவாதத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *