தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மண்ணடி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டத்தின் 370 வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசை கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வட சென்னை மாவட்ட தலைவர் சாகுல் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் பா.அப்துல் ரஹ்மான் ,மாநில செயலாளர்கள் ஐ. அன்சாரி , எஸ்.முஹம்மது யாஸிர்,தென் சென்னை மாவட்ட தலைவர் ஹபீபுல்லா, காஞ்சி மேற்கு மாவட்ட தலைவர் அல் அமீன், காஞ்சி கிழக்கு மாவட்ட தலைவர் அமானுல்லாஹ், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இப்ராஹீம், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் மாலிக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தினர்.

மேலாண்மைக் குழு தலைவர் எம்.எ.எஸ்.சுலைமான் அவர்கள் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினார்.மேலும் இதில் திறனான இஸ்லாமிய ஆண்கள் , பெண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *