தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு அறவழிப் போராட்டம்

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் பட்டாசு தொழிலை பாதுகாத்திடவும், தமிழகத்தின் பாரம்பரியமான சிவகாசி பட்டாசு தொழிலை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் பட்டாசு வெடிப்பதற்கும், உற்பத்தி செய்வதற்கும், சுப்ரீம்கோர்ட் கட்டுப்பாடு விதித்ததை மறுபரிசீலனை செய்யக் கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜா சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த அறப்போராட்டத்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தன் அவர்கள் மத்தாப்பு கொளுத்தி தொடங்கி வைத்தார். இதில் பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, த.மா.கா மூத்த துணைத் தலைவர் கோவை தங்கம்,முன்னாள் எம்.எல்.ஏ.விடியல் சேகர் மதிமுக துணைச் செயலாளர் மல்லை சத்யா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், வெற்றிவேல், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், துணைப் பொதுச்செயலாளர் எல்.கே. என். ராஜா, நாடார் மக்கள் சக்தி இளைஞரணி தலைவர் சத்ரியன் பாபு தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் திறளாக கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *