தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா

அசோக் நகர் : தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவையின் தலைமை அலுவலகம் திறப்பு விழா அசோக் நகரில் உள்ள லேண்ட் மார் வல் பில்டிங்கில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் மாநில தலைவர் அ.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த திறப்பு விழா தமிழ் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் பொதுச்செயலாளர் திருப்பூர் எல். வரதராஜன், பொருளாளர் சி.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைப்பெற்றது.

மேலும் இந்த அலுவலக திறப்பு விழாவில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.டி தனபாலன், கில்டு சங்கத் தலைவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம், அனைத்து இந்திய கார் விநியோகஸ்தர் சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் ஜி.எட்வீன் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

இந்த பேரவையின் நிர்வாகிகளான மாநில துணை பொதுச் செயலாளர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன்,மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் க.அசோக்குமார், மதுரை மாவட்ட தலைவர் எம்.பாண்டியராஜன் ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இவ்விழாவில் மாவட்ட நிர்வாகிகள், மகளிரணியினர் திறளாக கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *