திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி அவர்கள் வில்லாபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி அவர்கள் வில்லாபுரம் பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருப்பரங்குன்றம் சட்டபேரவைதொகுதி. இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முனியாண்டி அவர்கள் 62வது வட்டத்திற்குட்பட்ட வில்லாபுரத்திலுள்ள மீனாட்சி நகர் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை மீனாட்சி நகரிலிருந்து தொடங்கினார். மேலும் குமாரசாமி தெரு, மாரோஜா தெரு, கிருஷ்ணா தெரு, ராஜீவ் காந்தி தெரு,துளசி ராம் தெரு,அகஸ்தியர் தெரு, காளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார் அப்போது பிரச்சார வாகனத்தில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி , பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், கிருஷ்ணகிரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமார், வட்ட செயலாளர் கருத்தமுத்து, பகுதி கழக அவைத் தலைவர் காசிராம் ஆகியோர் உடனிருந்தனர்மேலும் பிரச்சாரத்தின் போது பர்கூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் கே.இ. கிருஷ்ணமூர்த்தி, மனோரஞ்சிதம் நாகராஜ், நாகரசம்பட்டி முன்னாள் பேருராட்சி தலைவரும், நகர செயலாளர் பி.அண்ணாதுரை, காவேரிப்பட்டினம் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் சிவாஜி , அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் வில்லாபுரம் வட்ட, பகுதி கழக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்ட அனைத்துப்பகுதிகளிலும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அது மட்டுமில்லாமல் பொதுமக்கள் வேட்பாளர் எஸ். முனியாண்டி அவர்களுக்கு மலர்கள் தூவியும்.ஆரத்தி எடுத்தும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *