தி.மு.க.,வில் இணைந்த மாற்று கட்சி நிர்வாகிகள்

தி.மு.க.,வில் இணைந்த மாற்று கட்சி  நிர்வாகிகள்

சென்னை: சேப்பாக்கம் தொகுதியில் பா.ம.க வட்ட செயலாளர் சந்திரகுமார் என்கிற ரொட்டி,அதிமுக துணை செயலாளர் ராஜா, பேரவை செயலாளர் சாமுவேல்,மெரினா ரவி,புருஷோத்தமன் உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் தங்களது கட்சிகளில் இருந்து விலகி தங்களது உறுப்பினர் அட்டையை கொடுத்துவிட்டு சேப்பாக்கம் பகுதி கழக செயலாளர் மதன்மோகன், அவர்கள் தலைமையில் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
உடன் 114 வது வட்ட கழக செயலாளர் கோபி, 114 வது முன்னாள் திமுக வட்ட கழக செயலாளர் அழகுதனா ஆகியோர் மாற்றுக்கட்சியில் இருந்து தி.மு.கவில் இணைந்தவர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து திருவல்லி கேணி பகுதிகளில் பொதுமக்களிடம் சென்று ஆதரவு திரட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *