பத்மபிரியா பள்ளி சார்பில் அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் உலக அன்னையர் தின விழா கொண்டாட்டம்

பத்மபிரியா பள்ளி சார்பில் அன்னை உள்ளம் முதியோர் இல்லத்தில் உலக அன்னையர் தின விழா கொண்டாட்டம்

சென்னை: பத்மபிரியா பள்ளி சார்பில் உலக அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அன்னை உள்ளம் ஆதரவற்றோர் மற்றும் முதியோர் பெண்கள் இல்லத்தில் அன்னையர் தின விழா வழக்கறிஞர் பத்மபிரியா, இயக்குனர் தமிழ்பாரதி ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியில் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு முதியோர் இல்லத்தில் வசித்து வரும் பெண்களை (முதியோர்களை) மகிழ்விக்கும் விதமாக அன்னையர் தின கேக் வெட்டிக்கொண்டாடப்பட்டது. மேலும் வயது முதிர்ந்த முதியோர் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளாக சேலைகள் வழங்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்துக் கொண்டு ஒத்துழைப்பு நல்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *