பெண்கள் தலைமுடியில் அதிகமாக ஜடை பின்னல்கள் பின்னி புதிய உலக சாதனை படைத்த பிரபல அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன்

பெண்கள் தலைமுடியில் அதிகமாக ஜடை பின்னல்கள் பின்னி புதிய உலக சாதனை படைத்த பிரபல அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன்

சென்னை: ப்ரெண்ட்ஸ் பியூட்டி கேர்&அகாடமியின் நிறுவனர் வாசுகி மணிவண்ணன் அவர்கள் பெண்கள் தலைமுடியில் ஜடை பின்னி ஒரு நாள் முழுவதும் (24 மணி நேரம்) தொடர்ந்து பெண்களுக்கு ஜடை பின்னல் உலக சாதனை முயற்சி 07-06-2019 மாலை 7.15 மணியளவில் தொடங்கி 08-06-2019 மாலை 7.15 மணி வரை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்க் எலான்சா தனியார் விடுதியில் நடைபெற்றது .

இந்த உலக சாதனை நிகழ்ச்சியை அழகு கலை நிபுணர் வாசுகி மணிவண்ணன் அவர்கள் குறித்த நேரத்தில் வெற்றிகரமாக பெண்கள் தலைமுடியில் அதிகமாக 167 முறை ஜடை பின்னல்களை பின்னி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். குறித்த நேரத்தில் இந்த சாதனையை வெற்றிகரமாக முடித்த வாசுகி மணிவண்ணன் அவர்களுக்கு UNIQUE WORLD RECORDS சார்பில் அவரது சாதனையை அங்கீகரித்து பாராட்டு சான்றிதழ், விருது மற்றும் கேடயம் வழங்கி கவரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இவரது சாதனைக்கு உறுதுணையாக அவரது கணவர் மணிவண்ணன், மற்றும் டேவிட் ஆகியோர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *