பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தலைப்பில் 5 வது தேசிய கருத்தரங்கம்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தலைப்பில் 5 வது தேசிய கருத்தரங்கம்

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தலைப்பில் 5 வது தேசிய கருத்தரங்கத்தை இந்திய மருத்துவ சட்ட மற்றும் நெறிமுறைகள் சங்கம் நடத்தியது. இந்த விழாவின் தொடக்க நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் பீலா ராஜேஷ், ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதற்கான தீர்வுகள் தொடர்பாக மருத்துவர்களிடம் முழுமையான விழிப்பணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான விழிப்புணர்வு தொடர்பாக கருத்தரங்கம். பாதிக்கும் நபர்களுக்கு சட்டம், நீதி கிடைப்பது தொடர்பாக விவாதிக்கிறோம் என்ற அவர், குற்றம், வன்கொடுமை குறைய வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டார்.

குடிநீர் தட்டுப்பாடு குறித்த கேள்விக்கு, பெரும்பாலும் அந்த பிரச்சனை இருக்கிறது. அரசு மருத்துவமனையில் இதை கவனிக்க ஆய்வு கூட்டம் நடத்தியுள்ளோம். தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் மருத்துவர்கள் கவனித்து வருகிறோம் என்ற அவர், சித்தா படிப்புகளுக்கு நீட் உண்டா இல்லையா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed