பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் கழகபகுதி பாக பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் கழகபகுதி பாக பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம்…
வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு பெரம்பூர் கழக பகுதி பாக பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் மூலக்கடையிலுள்ள ஸ்ரீ வள்ளி மஹால் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க கழக அவைத்தலைவர் திரு.இ.மதுசூதனன் தலைமையில் நடைப்பெற்றது.                                      வட சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மற்றும் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் ஜெ.கே.ரமேஷ் வரவேற்புரை ஆற்றினர்.                 இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே. இராதாகிருஷ்ணன் ஆகியோர சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டு சிறப்புைரையாற்றினர். மேலும் இதில் கழக செய்தி தொடர்பாளர் ஜே.சி.டி. பிரபாகர், கழக அமைப்பு செயலாளர் திருமதி.கோகுல இந்திரா, கழக மகளிரணி செயலாளர் விஜிலா சத்யானந்த் எம் .பி .கழக புரட்சித் தலைவி இணைச் செயலாளர் ஜே.ஜெய்வர்தன் எம்.பி. கழக மாணவரனி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி. தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை. வி.என்.ரவி, தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் சத்தியா ஆகியோர் பெரம்பூர் இடைத்தேர்தல் வெற்றிக்கான ஆலோசனைகளை வழங்கினர். இதில் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகளின் பிற அணி பொறுப்பாளர்கள், மகளிரணியினர் உள்பட திறளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *