ரோகித் ஷர்மா பெயரில் உலக தர பயிற்சி அளிக்க கூடிய வகையில் புதிய கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மையம் தொடக்கம்….       

ரோகித் ஷர்மா பெயரில் உலக தர பயிற்சி அளிக்க கூடிய வகையில் புதிய கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மையம் தொடக்கம்….  சென்னை மணப்பாக்கத்தில் ரோகித் சர்மா பெயரில் புதிய கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி மையத்தை
இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு திறந்து வைத்தார்.மேலும் இதில் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், திரைப்பட நடிகருமான சரத்குமார், சிங்கப்பூர் தேசிய பெண்கள் சச்சின் அணி கேப்டன் திவ்யா, பி.சி.சி.ஐ லெவல் கோச் பிரதீப் இங்கேல், ஜேப்பியார் கல்வி நிறுவனத்தின் விளையாட்டு இயக்குநர் அபிலாஷ் ரத்னாகரன் உள்பட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அவர்கள் எந்த ஒரு விசயம் செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு சரியான வழிகாட்டுதல் வேண்டும். வழிகாட்டுதல் இருந்தால் தான் சரியான பாதையை தேர்ந்தெடுக்க முடியும்.அதை சார்ந்த தெளிவும் அவர்களுக்கு கிடைக்கும் எனவும் மேலும் நானும் ஒரு நல்ல விளையாட்டு வீரர்தான் என்னைப் பார்ப்பதற்கு 25 வயது உடையவன் போல் தான் இருப்பேன் ஆனால் உண்மையில் 64 வயது உடையவன்தான் என பேசினார்.  பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் அபிநவ் முகுந்த் விளையாட்டு மைதானத்தில் மட்டை பிடித்து விளையாட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் ஒவ்வொரு பந்தை போட்டு விளையாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *