வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க சார்பில் மழை வேண்டி வியாசர்பாடி ஸ்ரீ இரவீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அ.தி.மு.க சார்பில் மழை வேண்டி வியாசர்பாடி ஸ்ரீ இரவீஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம்

வியாசர்பாடி:தமிழக மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டியும், மழை பெய்ய வேண்டியும், பெரம்பூர் பகுதி வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பாள் சமேத ஸ்ரீ இரவீஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது.இந்த நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் அவர்கள் அபிஷேகம் மற்றும் பிரார்த்தனை செய்து வழிபட்டு சிறப்பு பூஜையில் கலந்துக் கொண்டு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி செயலாளர் ஜெ.கே.ரமேஷ் மற்றும் வட சென்னை வடக்கு (கிழக்கு) இலக்கிய அணி மாவட்ட செயலாளர் து.சம்பத் முன்னிலை வகித்தனர்.

மேலும் கட்சி நிர்வாகிகளான மா.ஜெயபிரகாசம் டேவிட்ஞானசேகரன், வட சென்னை கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை லிமிடெட் தலைவர் வியாசை எம்.இளங்கோவன், புரட்சித் தலைவி அம்மா பேரவை பெரம்பூர் பகுதி தலைவர் எஸ். பவானி வெங்கடேசன் ஆக்கம் அகஸ்டின், என்.எம்.பாஸ்கரன், டிஒய்கே.செந்தில்,மகளிரணியை  சேர்ந்த ஜி.கிருஷ்ணவேணி, கே.செல்வராணி, சுஜாதா மதனகோபால் உள்ளிட்டவட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் திறளாக கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *