வாணியம்பாடியில் கல்லாகட்டும் காட்டன் சூதாட்டம் – கண்டுக்கொள்ளாத நகர காவல் ஆய்வாளர்

வாணியம்பாடியில் கல்லாகட்டும் காட்டன் சூதாட்டம்கண்டுக்கொள்ளாத நகர காவல் ஆய்வாளர்

வாணியம்பாடி :
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகருக்குட்பட்ட பஷீராபாத் பகுதியில் அப்பு என்பவர் தலைமையில் மலங்ரோடு பசுலு, திருமாஞ்சோலை கோவிந்தன், நியூடெல்லி மணி, காதர்பேட்டை ஜலால், நியூடவுன் மன்னார், பெரியபேட்டை ஆசிம், நியூடவுன் சேட்டு, (பைபாஸ் சந்திப்பு)
ஆகியவர்களை பசுலு வேளைக்கு அமர்த்தி காட்டன் சூதாட்டம் நடத்தி வருகிறார். இவர்களிடம் சூதாட்டத்தில் ஈடுபடும் பொது மக்கள் 10 ரூபாய்க்கு
சூதாட்டத்தில் நம்பர் எழுதினால் 600 ரூபாய் தருவதாக கூறப்படுகிறது. இதை நம்பி கூலி வேலை, செய்பவர்கள் கட்டிட தொழிலாளர்கள், சிறு காய்கறி வியாபாரிகள்,தோல் தொழிற்சாலை    தொழிலாளர்கள், மற்றும் பெண்களும் இந்த சூதாட்டத்தில் தங்கள் வருமான பணத்தை இழந்துள்ளதாக தகவல்
பல குடும்பங்கள் இவர்களால் சீரழிந்துள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

ஆகவே இவர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் மாவட்ட ஆட்சியரும் வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளரும்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாணியம்பாடி பொது மக்களின் வேண்டுகோளாக உள்ளது. நடவடிக்கை எடுப்பார்களா சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *