வாணியம்பாடியில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை என உணவக உரிமையாளர்கள் சுகாதார ஆய்வாளரிடம் கோரிக்கை மனு

வாணியம்பாடியில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை என உணவக உரிமையாளர்கள் சுகாதார ஆய்வாளரிடம் கோரிக்கை மனு.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டு நடைமுறையில் இருந்துவரும் நிலையில்

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உணவக உரிமையாளர்கள் தங்களுடைய உணவகத்தில் சேரக்கூடிய குப்பைகளை கழிவுகளை சரிவர நகராட்சி ஊழியர்கள் எடுப்பதில்லை என புகார் தெரிவித்து வாணியம்பாடி உணவக உரிமையாளர் சங்க தலைவர் சையத் ஜமால் அகமது, செயலாளர்கபீம் அஹமத் பொருளாளர் அஹமத் பாஷா, மற்றும் நிர்வாக குழு குமரகுரு, தமிழருவி ஆகியோர் முன்னிலையில் நகர நல அலுவலரிடம் கோரிக்கை மனுவினை கொடுத்தனர் இதில் தற்போது பிளாஸ்டிக் தடையினால் உணவகங்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த வகையில் ஒவ்வொரு உணவகத்திலும் சேரக்கூடிய குப்பைகளை நகராட்சி நிர்வாகம் எடுப்பதில்லை என புகார் தெரிவித்தனர் புகாரை ஏற்றுக்கொண்ட நகர நல அலுவலர் டாக்டர் அஜிதா இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மேலும் ஒவ்வொரு உணவகத்தில் இருந்தும் 50 கிலோ மட்டுமே எடுப்பதற்கான உரிமை உள்ளதாகவும் மேற்படி இருக்கக் கூடிய கழிவுகளை தாங்களே மறு சுழற்சி செய்து கொள்ளவும் எனவும் நகர நல அலுவலர் அஜிதா கூறினார் இதற்கு உணவக உரிமையாளர்கள் எங்களுக்கு போதிய வசதிகள் இல்லை எனவும் இதற்கு முன்பு எவ்வாறு இருந்ததோ அந்த முறையை பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் அப்போது அஹமத் பாஷா, அன்வர், நூருல்லா, இராமசாமி, பாபு, முக்தியார் அஹமத், ஷாகீர் அஹமத், விஜயகும்ர், முக்தியார் பாஷா, லட்சுமணராவ், நபீல் அஹமத் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *