வாணியம்பாடியில் போலி சான்றிதழ் தயாரித்து விநியோகம் செய்த நபர் கைது

வாணியம்பாடி நியூ டவுனில் ஆதார் அட்டை திருத்தம் செய்ய அரசு மருத்துவர் தன்வீர் அஹமத் என்பவரின் போலி கையெழுத்திட்டு போலி மருத்துவ சான்று தயாரித்த வேங்கடேஷ்  கைது செய்து விசாரணை. அரசு மருத்துவர் தன்வீர் அஹமத் கொடுத்த புகாரின் பேரில் நகர போலீசார்  நடவடிக்கை.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில்
ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய கொடுத்த மருத்துவ சான்றிதழ் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வாணியம்பாடியை சேர்ந்த சிறுவன் ஒருவன் வாணியம்பாடி நகராட்சி கட்டிடவளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் திருத்தம் செய்ய சென்றுள்ளான் அங்கே தற்காலிக பணியாளராக உள்ள விக்கி என்பவர் மருத்துவ சான்றிதழ் வாங்கி வர கூறியுள்ளார் அப்போது அப்பகுதியில் இருந்த சனாவுல்லா என்பவர் சிறுவனிடம் தான் வாங்கி தருவதாக கூறி அழைத்துச்சென்று நியூட்டவுன் பகுதியில் உள்ள ( வெப் வேல்டு ) எனும் கணினி நிலையத்தில் மருத்துவ சான்றிதழ்க்கான பணத்தை பெற்றுக்கொண்டு நாளை வருமாறு அனுப்பியுள்ளார் பின்னர் மறுநாள் மருத்துவ சான்றிதழ் கொடுத்துள்ளார் அந்த மருத்துவ சான்றிதழ் கணினியில்
நிராகரிக்கப்படதால் மருத்துவரிடம் முத்திரை  (சீல் ) பெற்று வருமாரு ஆதார் மையத்தில் கூறியுள்ளனர்
இதனால் அச்சிறுவன் வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் , காது ,மூக்கு, தொண்டை சிறப்பு நிபுணர் டாக்டர்
தன்வீர் அகமத் அவர்களிடம் சென்று இச்சான்றிதழில் தங்களுடைய முத்திரை பதித்து தருமாறு கேட்டுள்ளான் சான்றிதழை வாங்கி பார்த்த மருத்துவருக்கு அதிர்ச்சி அது அவர் கொடுக்காத சான்றிதழ் மேலும் இதில் அவர் கையெழுத்து போர்ஜெரியாக போடப்படுடிருந்தது
இது குறித்து சிறுவனிடம் விசாரிப்பதற்குள் சிறுவன் பயந்து ஓடிவிட்டான் இதனால் மருத்துவர் நகர
காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் அதன் அடிப்படையில் காவல் துறையினர் நகராட்சி ஆதார்
மையத்தில் தற்லிகமாக பணிபுரியும் விக்கி என்பவரை விசாரித்ததில்
அந்த சிறுவனை அழைத்து சென்றது சனாவுல்லா என்றும் மேலும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்
காவல் துறையினர் சானவுல்லா கொடுத்த தகவலின் பேரில் ஜெ. வெங்கடேஷ் குமார்     த/பெ ஜெயபால் என்பவரை கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டனர் அதன் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்ட வெங்கடேசை இரவு 12மணிக்கு மேலே மாண்புமிகு குற்றவியல் நீதிபதி முன்னர் ஆஜர் படுத்தி வேலூர் தொரப்பாடி மத்திய சிறையில் அடைத்தனர்
மேலும் வெங்கடேசை காப்பாற்றவும் அவர் மீது வழக்கு எதுவும் போட வேண்டாம் என அதிகாரத்தில் உள்ள சில ராராக்கள் மிகவும்
பாடுபட்டனர் அதற்குள் இந்த செய்தி வாட்சப் மற்றும் முகநூலில் வேகமாக பரவியதால் ராராக்கள் முயற்சி பயனற்று போனது மேலும் வெங்கடேசை நீதிமன்றத்தில் விசாரணைக்காக
போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் பாஸ்போர்ட், மற்றும்  கல்லூரி லக்சரர், பிரின்ஸ்பால்
போன்றவர்களால் கொடுக்கப்படும் சான்றிதழ்களிலும் போலியாக தயாரித்த கதைகள் வெளிச்சத்துக்கு வரும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *