வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் தனியார் கேஸ் அலுவலகம்         

வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயங்கி வரும் தனியார் கேஸ் அலுவலகம்                                        வேலூர் மாவட்டம்
வாணியம்பாடி பஸ் நிலையம் பெட்ரோல் பங்கு எதிரில் டோட்டல் கேஸ்  எனும்  அலுவலகத்தை நியூட்டன் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவர் நடத்தி வருகிறார். இந்த அலுவலகத்தில் எரிவாயு கேஸ் சிலிண்டர்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய அனுமதி இல்லை. அதற்கென தனியாக பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாத இடத்தில் குடோன் அமைத்து விற்பனை செய்ய வேண்டும். ஆனால் உதயகுமார் என்பவர் பஸ்நிலையத்தில் அருகேயே உள்ள தனது அலுவலகத்திலேயே கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்வது  சட்ட விதிமுறைகளை மீறிய செயலாகும். மேலும் இந்த அலுவலகத்தில் விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பதற்கான எந்த  முன்னெச்சரிக்கை  உபகரணங்களும் இல்லை. தவறி இந்த இடத்தில் விபத்து ஏற்பட்டால்  இந்த அலுவலகம் எதிரில் பெட்ரோல் பங்கு உள்ளது என்பது குறிப்பிடதக்கது. மேலும் பொதுமக்களுக்கு பெரும் உயிர் சேதங்கள் ஏற்படும் என்பதில் எள்ளலவும் சந்தேகம் இல்லை. மேலும் இதுகுறித்து நாம் விசாரித்ததில உதயகுமார் என்பவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு குறிப்பாக தீயணைப்பு  துறை அதிகாரிகளுக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை மாமுலாக கொடுக்கப்படுவதாக தகவல்..  இவை அனைத்தையும் அறிந்த அதிகாரிகள் ஏன் இதுவரை உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.மேலும் இவர் ஆளும் கட்சியில் உயர் பதவியில் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவராம். அதனாலேயே இவருடைய விதிமீறல்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் கொடுப்பதை வாங்கிக்கொண்டு வாய் மூடி உள்ளதாக தகவல். இதற்கு மேலாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை
எடுப்பார்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *