வியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

வியாசர்பாடி அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

வியாசர்பாடி:சென்னை வியாசர்பாடி பெரியார் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பவானி பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் 52-ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் வடசென்னை நாம்கோ கூட்டுறவு சங்க தலைவர் வியாசை எம்.இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் அவர்கள் மஹா கும்பாபிஷேகத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். பிறகு கங்கை புனித நீர் கலசத்தை கோவில் கோபுரத்தில் வேத மந்திரங்கள் முழங்க புனித நீரை ஊற்றினார். இதனைத் தொடர்ந்து திருக்கோவில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி கழக செயலாளர் ஜெ.கே.ரமேஷ், மு.வெற்றிவேந்தன், வி.பொன்முடி, ஆர். நித்தியானந்தம், எஸ்.ஏ.சூசை, கடல்ராஜன், டி.ராமதிலகம், பெரம்பூர் சேகர், வி.வாசுகி, குமுதவள்ளி, டி.கே.பி. அண்ணாதுரை, மல்லிகா, தீனதயாளன் உள்ளிட்ட கழக மாவட்ட, பகுதி, வட்ட, நிர்வாகிகள் மற்றும் திருக்கோவில் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *