விளையாட்டு வீராங்கனைக்கே இந்த நிலை என்றால் விவரம் அறியாத மக்களுக்கு ???

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியம், வெள்ளிவாயல் சாவடி ஊராட்சி அடங்கிய ௭க்கல் காலனியில் வசித்து வருபவர் மகேஸ்வரி இவர் உத்தர பிரதேசத்தில் தற்போது நடைபெற்ற தேசிய மாற்று திறனாளிக ளுக்கான ஜுடோ போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார்.இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய மாற்று திறனாளிகளுக்கான ஜீடோ விளையாட்டு போட்டி கலந்து கொண்டு தங்ககோப்பையும் சிறந்த வீராங்கைக்கான பட்டமும் பெற்றார். இவர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்.இவரது தந்தை முருகன்,தாய் சாமந்தி,தங்கை ராஜேஸ்வரி அணைவரும் கண் பார்வையற்றவர்கள். தந்தை முருகன் சென்னை மின்சார ரெயிலில் சிறுவியாபாரம் செய்து அந்த வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்திவருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் கலந்துகொள்ள திருவள்ளுர்மாவட்ட ஆட்சியாளராக இருந்த சுந்தரவள்ளி அவர்கள் நிதி உதவி வழங்கினார்.மேலும் தொகுப்பு வீடு கட்டிதர வேண்டி மனு அளித்தனர்.இதனை ஏற்றுக்கொண்ட மாவட்டஆட்சியர் அவர்கள்.தொகுப்பு வீடு வழங்க உத்தரவிட்டார். தற்போது தொகுப்பு வீடுகட்டிக்கொள்ள அரசாணையும் வழங்கபட்டது. முன்பணம் வைத்து வீடுகட்ட முடியாததால் மாவட்ட அலுவலகத்தில் தொகுப்பு வீடு கட்டிதர வேண்டி மனு அளித்துள்ளனர். கடந்த ஆறுமாதத்திற்கு முன் கழிவறை கட்டும் பணி நடைபெற்றது. கழிவறை தொட்டி அமைக்காமல் சென்றனர்.ஒன்றிய அலுவலகத்தை பலமுறை அனுகியும் இதுவரை எந்த பயனுமில்லை. விளையாட்டு வீராங்கனைக்கே இந்த நிலை என்றால் விவரம் அறியாத மக்களுக்கு ???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *