எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா

எஸ்.ஆர்.எம்.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா தி.பொ.கணேசன் அரங்கத்தில் நடைப்பெற்றது.எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக நிறுவனர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் வரவேற்புரை வழங்கினார். மக்களவையின் சபாநாயகர் மேதகு சுமித்ரா மகாஜன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கெளரவித்தார். இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் மதராஸ் இ .என்.டி.ஆராய்ச்சி நிலையத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர்.மோகன் காமேஷ்வரன் அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்த பட்டமளிப்பு விழாவில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் என பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல், மருத்துவம், நல்வாழ்வு அறிவியல் மற்றும் மேலாண்மை புலன்களின் மாணவர்கள் ஆகிய 8000 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *