எஸ்.ஆர்.எம் மருந்தியல் கல்லூரியின் வெள்ளிவிழா


எஸ்.ஆர்.எம் மருந்தியல் கல்லூரியின் வெள்ளிவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் மருந்தியல் கல்லூரி புலத்தலைவர் டாக்டர் லட்சுமி வரவேற்புரை வழங்கினார்.எஸ்.ஆர்.எம் மருந்தியல் கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் கல்லூரி பற்றிய சிறப்பு காணொளியை திரையிட்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் நிறுவன வேந்தர் டாக்டர் தா.இரா.பாரிவேந்தர் நிகழ்ச்சியில் தலைமையுரை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய போதைப்பொருள் தடுப்பு துறையின் இணை ஆணையர் டாக்டர் எஸ். மணிவண்ணன் மருந்தியல் துறையின் எதிர்கால வளர்ச்சிக் குறித்தும் , அத்துறையில் செய்யப்பட்டுள்ள முதலீடு குறித்தும் பேசினார். Fourrts இந்தியா பரிசோதனை கூட்டங்களின் நிறுவனர் திரு எஸ்.வி.வீரமணி பேசுகையில் இந்திய மருந்து உற்பத்தியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் டாக்டர் சந்தீப் சன்செட்டி மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் அனைவரையும் அவர்களது சிறப்பான பணிக்காக பாராட்டினார்.
மேலும் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் நா.சேதுராமன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆராய்ச்சி, காப்புரிமை பெறுவதில் ஆர்வம் காட்டவேண்டும் என்று அறிவுரைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் மருத்துவ கல்லூரி புலத்தலைவர் டாக்டர் சுந்தரம் மற்றும் இணைப் புலத்தலைவர் டாக்டர் கிரிஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவின் நிறைவாக மருத்துவ கல்லூரி துணை முதல்வர் டாக்டர் சித்ரா நன்றியுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *