வில்லி நடிகையாகவே மாறிவரும் வரலெட்சுமி

சரத்குமாரின் வாரிசாக சினிமாவுக்கு வந்தவர் வரலட்சுமி. பாலே டான்சராக இருந்த வரலட்சுமிக்கு சினிமா நடிகை ஆகும் ஆசை வந்தது. முதன் முதலாக விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிம்பு ஜோடியாக போடா போடி படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய அளவிற்கு பேசப்படவில்லை. இதனால் வரலட்சுமிக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. அவர் தன் நண்பர் விஷாலுடன் நடித்த மதனகாமராஜா படம் வெளிவரவில்லை. அதன் பிறகு பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை படத்தில் நடித்தார். அதுவும் வெற்றிபெற வில்லை. தான் நாயகியாக நடிக்கும் படங்கள் வெற்றி பெறாமல் போகவே ரூட்டை மாற்றினார். விக்ரம் வேதா படத்தில் கேங்ஸ்டராக நடித்தார். அதன் பிறகு சண்டக்கோழி படத்தில் டெரர் வில்லி ஆனார். சர்கார் படத்தில் கோமளவல்லியாக மிரட்டினார்.
இப்போது மாரி 2 படத்தில் தனுஷின் வில்லியாக மிரட்ட வருகிறார். விஜயா என்ற பெண் தாதாவாக நடித்திருக்கிறார். வில்லியாக நடித்தாலும் ராஜபார்வை, நீயா 2 படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். என்றாலும் இயக்குனர்கள் அவரை நெகட்டிவ் கலந்த கேரக்டருக்கே அணுகுகிறார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *