அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முப்பெரும் விழா                 

அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் முப்பெரும் விழா          வளசரவாக்கம் : அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை மற்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலண்டர் வெளியீட்டு விழா, பதவியேற்பு விழா மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வளசரவாக்கம் பார்வதி மஹாலில் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை நிறுவனத் தலைவர் ஏ. ஹென்றி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் முதன்மை ஆலோசகர் ஜி. இராவணன் முன்னிலை வகித்தார் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் கௌரவத் தலைவர் கவிஞர் மேக பாஸ்கரன் வரவேற்புரை ஆற்றினார்.கிங் மேக்கர் ப்ராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிங்மேக்கர் எஸ். ராஜசேகர் பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் வெ பொன்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிங்மேக்கர் எஸ். ராஜசேகர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பின் முதன்மை ஆலோசகர் ஜி. ரமேஷ், பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் வாக்கு சித்தர் வீரமணி பாரதிதாசன் மற்றும்சத்தியம்தொலைக்காட்சியின்பொறுப்பாசிரியர்பி.ஆர்.அரவிந்தாக்சன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் கே.மொய்தீன் நன்றி உரை ஆற்றினார் இந்த விழாவில் திறளான சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *