அமைச்சர் காமராஜ் தலைமையில் மாநில நுகர்வோர் பாதுகாப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் காமராஜ் தலைமையில் மாநில நுகர்வோர் பாதுகாப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்

சென்னை : மாநில நுகர்வோர் பாதுகாப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம்  சென்னை சிந்தாதிரிப்பேட்டையிலுள்ள குடிநீர் வழங்கல் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தலைமை வகித்தார்.அரசுசெயலர்கள்,மத்திய,மாநில அரசு மற்றும் பொது நிறுவனங்களின் உயர் அலுவலர்கள், நுகர்வோர் பாதுகாப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள்,தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள்,வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள்,மாவட்டங்களில் செயல்படும் பல்வேறு நுகர்வோர் பாதுகாப்பு சங்கங்கள் மற்றும் குழுக்களின் தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.
அரசின் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தி நுகர்வோர் நலனுக்கு ஏற்றார்போல் அவ்வப்போது தேவைப்படும் மாற்றங்கள் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யவும்,தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,நுகர்வோர் பாதுகாப்புக்குழுக்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, மாநில நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,நுகர்வோர் அனைவருக்கும் உரிய விலையில் தரமான பொருட்கள் கிடைக்கவும்,சிறந்த முறையில் சேவைகள் வழங்குவதையும் நேர்மையற்ற வணிக முறைகளில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கா அரசு உறுதி பூண்டுள்ளது என மாநில நுகர்வோர் பாதுகாப்புக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் இரா.காமராஜ் தெரிவித்தார்.                            (ராஜ்குமார் – செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *