ஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப் போட்டி

ஆகஸ்டு 18ல் CHENNAI Got TALENT மாபெரும் தனித்திறன் நடன இறுதிப்போட்டி

திருவான்மியூர் :  நடனக்கலையில் ஆர்வமுள்ளதனித்திறமையாளர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் CHENNAI Got TALENT என்ற நடனகலைஞர்களின் திறமைகளுக்கான போட்டி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தன. தமிழகம் முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்ற இப்போட்டியில் கால்இறுதி, அரையிறுதி சுற்றுகள் மூலம் 70 நடன கலைஞர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களை
CHENNAI Got TALENT ஏற்பாட்டாளர்கள் சந்தித்தனர்.
டான்ஸ் மாஸ்டர் பாம்பே பாஸ்கர் கூறுகையில்,
நடனத்தில் ஆர்வமுள்ள கலைஞர்களின் தனித்திறமைகளை கண்டறியும் நோக்கில்தான் CHENNAI Got TALENT என்ற நடனபோட்டி நடக்கிறது. இதில் எந்தவித ஒளிவு மறைவுக்கும் இடமில்லை.திறமை இருந்தால் மட்டுமே எங்கள் மேடையில் பங்குபெற முடியுமே தவிர வேறு எந்த பரிந்துரைகளுக்கும் இடமில்லை என்றார்.

CHENNAI Got TALENT அமைப்பாளர் ஜாபர் கூறுகையில்,
தமிழகத்தில் நாட்டிய நடனத்தில் விருப்பமுள்ளவர்களின் தனித்திறமையை கண்டறிந்து அவர்களுக்கான மேடையை உருவாக்கி தரவேண்டும் என்ற நோக்கில்தான்
CHENNAI Got TALENT போட்டியை துவக்கினோம். இதை நாங்கள் ஒரு குடும்பமாக இணைந்து நடத்தி வருகிறோம்.

500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்ற இப்போட்டியில் கால்இறுதி,அரையிறுதி சுற்றுகள் மூலம் 70 நடன கலைஞர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.ஆகஸ்ட் 18 தேதியன்று ஜேப்பியார் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடக்கும் இறுதி போட்டியில் வெற்றிபெற போவது யார் என்பது அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளிக்க வசதியாக டிக்கெட்டுகள் Bookmyshow இணைய தளத்தில் கிடைக்கின்றன.மூன்று பிரிவுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறப்போவது யார் என்பதை ஆகஸ்ட் 18 ல் தெரிந்துக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *