இந்தியாவில் முதன் முறையாக பார்க்கின்சன்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை விஜயா மருத்துவமனையில் அறிமுகம்

இந்தியாவில் முதன் முறையாக பார்க்கின்சன்ஸ் நோய்க்கு புதிய சிகிச்சை விஜயா மருத்துவமனையில் அறிமுகம்                              இந்தியாவிலேயே முதல் முறையாக அப்போ – பென் மற்றும் அப்போ பம்ப் சிகிச்சை அறிமுக விழா சென்னை, வடபழனியிலுள்ள விஜயா மருத்துமனை ஸ்ரீ பி.நாகிரெட்டி ஹாலில் நடைப்பெற்றது.தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணைச் செயலாளர் திரு. கிரண் குர்ராலா சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திருமதி பி.பாரதி ரெட்டி வரவேற்புரை ஆற்றினார். இந்த அறிமுக விழாவில் விஜயா மருத்துமனை மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.வெங்கட்ராம ரெட்டி, அறங்காவலர் திருமதி.வசுந்தரா மற்றும் தலைமை கணக்கு அதிகாரி திரு.பி.விஸ்வாத ரெட்டி ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.மேலும் இங்கு மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம் நடைப்பெற்றது.இதில் பார்க்கின்சன்ஸ் நோய்க்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் குறித்து உரையாற்றப்பட்டன. கிங்ஸ் கல்லூரியின் நரம்பியல் துறை தலைவர் மற்றும் நிபுணர் பேராசிரியர் ராய் சவுத்ரி மற்றும் டாக்டர் வினோத் மெட்டா ஆகியோர் இந்த கருத்தரங்கத்தை சிறந்த முறையில் நடத்தினர்.இக்கருத்தங் கில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல நரம்பியல் நிபுணர்கள் திறளாக கலந்துக் கொண்டனர். மேலும் இந்த சிகிச்சை குறித்து விபரங்கள் அறிய கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் 91763 30057

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *