உணவு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மதராசபட்டினம் விருந்து என்கின்ற பாரம்பரிய உணவு திருவிழா லோகோ வெளியீடு

உணவு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து மதராசபட்டினம் விருந்து என்கின்ற பாரம்பரிய உணவு திருவிழா லோகோ வெளியீடு

சென்னை :  உணவு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மதராசபட்டினம் விருந்து” என்கின்ற மாபெரும் பாரம்பரிய உணவு திருவிழா சென்னை தீவுத்திடலில் வருகின்ற 13ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான பிராண்ட் மற்றும் லோகோவை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர் டாக்டர்.பீலா. ராஜேஷ்,தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் திருமதி. பாரிஜாதம், பொது சுகாதார துறை இயக்குனர் மரு.சோமசுந்தரம், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மரு.ராமகிருஷ்ணன் உள்பட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

உணவு பாதுகாப்பு துறை மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மதராசபட்டினம் விருந்து திருவிழா நடைப்பெற உள்ளதாகவும், நல்ல தரமான பாரம்பரிய உணவிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் , பாரம்பரிய உணவுகளை மறக்காமல் அதன் நலனை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த திருவிழா நடத்தப்பட இருப்பதாகவும் கூறினார்.

மேலும்,தொற்றான் நோய்களை தவிர்க்க மக்கள் நல்வாழ்வு துறை எடுத்திருக்கும் புதிய முயற்சி தான் இந்த திருவிழா என்று கூறிய அவர் தொற்றான் நோய்கள் வராமல் இருக்க பாரம்பரிய உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த திருவிழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்றும், கலப்படமில்லாத உணவுகளை தயாரிப்பது தொடர்பாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும், சுய உதவி குழுக்கள் இதில் முழுமையாக பங்கேற்றுள்ளனர் என்றும், 150க்கும் மேற்பட்ட அரங்குகள் இங்கு அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், உணவில் கலப்படத்தை கண்டறிவது குறித்து தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *