என்.ஆர்.தனபாலன் அவர்களின் பிறந்த நாள் விழா

என்.ஆர்.தனபாலன் அவர்களின் பிறந்த நாள் விழா          பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் அவர்களின் 68 வது பிறந்த நாள் விழா சென்னை அசோக் நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் சிறப்பாக கொண்டாடபட்டது.இந்த பிறந்த நாள் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் கொள்கை விளக்க பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை என்.ஆர்.தனபாலன் அவர்கள் வெளியிட திருமாவளவன் பெற்றுக்கொண்டார். சேலம் செல்லப்பன் தலைமை உரையாற்ற, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். புழல் தர்ம ராஜ், கல்பாக்கம் மோகன், எஸ்.எம்.குருசாமி, ஆசை தம்பி மற்றும் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், நாடார் மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார், தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் முத்து ரமேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பெருந்தலைவர் மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் சந்தானம் அவர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தார்.மேலும் இதில்  கட்சி நிர்வாகிகள்,பிரமுகர்கள்,நண்பர்கள்,தொழில் அதிபர்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *