கஜா புயல் நிவாரணப் பணிகளில் எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம்

  எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளமான ரூ. 1 கோடியை கஜா புயல் நிவாரண நிதிக்காக டாக்டர். பாரிவேந்தர் அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் இன்று வழங்கினர். அதனோடு பாரிவேந்தர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம், 60 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள அத்தியாவசியப் பொருள்களை (குடிநீர், அரிசி, பிஸ்கட், தட்டு, போர்வை, லுங்கி, நைட்டி, நாப்கின், மெலுகுவர்த்தி, தீப்பெட்டி) கடந்த 5 நாட்களாக மிகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்கிவருகின்றது.
40-க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம். மாணவர்கள் கஜா புயல் பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கடந்த 5 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மச்சுவாடி, மஞ்சல்வயல், கணபதிபுரம், வடக்கு தொண்டைமான் ஊரணி, ராஜபுதூர், அதிரம்பட்டினம் ஆகிய கிராமங்களில், சாலையிலும், வீடுகளின் மேலும் விழுந்த மரங்களை செப்பனிட்டு, ஊர்களுக்குச் செல்லும் பாதைகளைச் சரி செய்து இருக்கிறார்கள். 3 அரசினர் பள்ளிகளிலும், சீர்திருத்தப் பணிகளை மேற்கொண்டனர். இந்தக் குழு தகுந்த உபகரணங்களுடன் சென்றுள்ளதால் கிராமம், கிராமமாக சீர்திருத்த பணிகளைச் செவ்வனே செய்து வருகின்றனர் . இப்பணி மேலும் 10 நாட்களுக்குத் தொடரும். எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, 30 பேர் கொண்ட ஒரு மருத்துவக் குழுவை, பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 5 நாட்களில் 7 இடங்களில், மருத்துவ முகாம்கள் நடத்தி 3000-த்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இந்த பணியும் தொடர்ந்து நடந்துவருகிறது.
புதிய தலைமுறை அறக்கட்டளை நிவாரணப் பொருள்கள் சேமிப்பதற்காக ஈக்காட்டுத்தாங்கலில் ஒரு நிலையம் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையத்தில் சேகரிக்கப்பட்ட பொருள்களுடன், முதல்கட்டமாக மன்னார்குடி, நாகப்பட்டினம் பகுதிகளில் ரூ. 30 லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள நிவாரணப் பொருள்களை கிராமம், கிராமமாக சென்று விநியோகம் செய்து வருகிறார்கள். 30 பேர் கொண்ட குழு சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். மேற்குறிப்பிட்ட, பணிகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தைக் கலந்தாலோசித்து அவர்களுடைய ஒப்புதலின் பேரில் செய்யப்பட்டு வருகிறது.உடன் இருப்போர் சேர்மன் திரு. ரவி பச்சமுத்து எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம், தலைவர் திரு.ப.சத்தியநாராயணா எஸ்.ஆர்.எம்.கல்விக்குழுமம், அறங்காவலர் திரு. நிரஞ்சன், எஸ்.ஆர்.எம். கல்விக்குழுமம், இணைத்துணைவேந்தர் முனைவர் இர.பாலசுப்பிரமணியன் எஸ்.ஆர்.எம். கல்விநிறுவனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *