குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் குறித்த சிறப்பு நோக்கு கூட்டம்!

குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் குறித்த சிறப்பு நோக்கு கூட்டம்!                                சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு 2019- ஜனவரி 23,24 தேதிகளில்நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் முதலீட்டிற்கான வாய்ப்புகள் குறித்த கூட்டம்திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள
கலந்தாய்வு அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.                  மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.உதவி இயக்குனர் ரமணி வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் நோக்கம் குறித்து செயல் முறை விளக்கப்படங்களுடன் தொழில் வணிகத்துறை இணை இயக்குனர் எஸ்.எம்.கில் உரையாற்றினார்.தொழில் முதலீட்டுக்கழகத்தில் உள்ள வாய்ப்புகள் குறித்து டிக் மண்டல மேலாளர் இரவிச்சந்திரன் உரையாற்றினார்.இக்கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தொழில் நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்த ஆணைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
உதவி இயக்குனர் ரவி நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *