சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா

சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா

சென்னை தி.நகரில் உள்ள தியாகராயர் அரங்கில் நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத தொடக்க விழா நிகழ்ச்சியில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் துறை அமைச்சர் சரோஜா, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை இயக்குனர் மதுமதி, ஆணையர் ஆபிரகாம், இயக்குனர் கவிதா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், அமைச்சர்கள் பரிசுகளை வழங்கினார்கள்

இந்த நிகழ்ச்சியில் பேசிய சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்ட துறை அமைச்சர் சரோஜா இந்தியாவிலேயே ஊட்டச்சத்து குறைபாடு குழந்தை விகிதம் தமிழகத்தில்தான் குறைவு என்றும் தெரிவித்த அவர் மேலும் ஊட்டச்சத்து குறைவாக குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க 54 ஆயிரம் அங்கன்வாடிகள் தமிழகத்தில் இருப்பதாகவும் இதன் மூலம் குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்,

அகில இந்திய அளவில் சமூக நலத் துறையில் தமிழகம் சிறப்பாக விளங்குகின்றன. அதற்கான முதல் பரிசும், இரண்டாவது பரிசும் தமிழக சமூக நலத்துறை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *