சிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

சிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்

சிந்தாதிரிப்பேட்டை :
சென்னை சிந்தாதிரிப்பேட்டை வியாபாரிகள் மீன் விற்பனை சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில்
டாக்டர் ஐ. இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சங்கசெயலாளர் சி.டி.சுரேஷ், பொருளாளர் இ.கே.சுதாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்க தலைவர் எம்.கே.ஷரீபு அனைவரையும் வரவேற்றார்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சங்க நிர்வாகிகள் கூறியதாவது….

மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகளுக்கு என பல சங்கங்கள் உள்ளன.சென்னையில் மீன் வியாபாரத்துக்கு புகழ்ப்பெற்ற சிந்தாதிரிப்பேட்டை மீன் வியாபாரிகளின் நலன்களுக்காக இந்த புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகள் பலரும்
தங்கள் தொழிலில் சந்தித்து வரும் பலவிதமான பிரச்சனைகளை குறித்தும் மனம் திறந்து தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

வியாபாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்படுவதன் மூலமாகவே பிரச்சனைகளை தீர்க்க முடியும் என வலியுறுத்தினர்.

மீன் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு
கூட்டுறவு சங்கம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மாநகரம் மட்டும் புறநகரில் மீன் வியாபாரத்துக்கான மார்க்கெட்டுகள் பலவும் தனியார் வசமே உள்ளன.ஆகவே
மீனவர்களின் நலனுக்காக ,
அரசு சார்பில் மீன் மார்க்கெட் ஒன்றை அமைத்துத் தர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்
இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *