சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் புதிய நட்சத்திர ஹோட்டல் “பார்க் எலன்ஷா” பிரமாண்டமான திறப்பு விழா!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் புதிய நட்சத்திர ஹோட்டல் “பார்க் எலன்ஷா” பிரமாண்டமான திறப்பு விழா!

நுங்கம்பாக்கம் :
சென்னையின் முக்கிய பகுதியான நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் எதிரே PARK ELANZA என்ற பெயரில் நட்சத்திர அந்தஸ்திலான நவீன சொகுசு விடுதி திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ” பார்க் எலன்ஷா ” நட்சத்திர ஹோட்டல் சேர்மன் ஏ.இரமேஸ்குமார் கூறுகையில்..
சென்னை நுங்கம்பாக்கத்தில் வெளிநாட்டு தூதரகங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள்,வணிக நிறுவனங்கள் உள்ளதால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் வியாபார நோக்கிலும், சுற்றுலாவுக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு இப்பகுதியில் போதிய நட்சத்திர ஹோட்டல் வசதியின்றி தவித்தனர். அதற்காக உருவானதுதான் ” பார்க் எலன்ஷா” நட்சத்திர ஹோட்டல்.இங்கு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
” பார்க் எலன்ஷா” நட்சத்திர ஹோட்டலின் சிறப்பு அம்சங்கள் குறித்து
நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.குழந்தையன் கூறுகையில்..அதிநவீன வசதிகள் கொண்ட ” பார்க் எலன்ஷா” நட்சத்திர ஹோட்டலில், நீச்சல் குளம் வியூ-வில் தங்குவதற்காகவும் விசாலமாக பிரம்மாண்டமான சூட் அறைகள் உட்பட 50 அழகுபடுத்தப்பட்ட அறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. ஜிம், மசாஜ் பார்லரும் வசதிகளையும் கொண்டுள்ளது.தென்னிந்திய,சைனீஸ் போன்ற பல்வேறு வகையான உணவுகளையும் பரிமாறும் வசதி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு :
PARK ELANZA
125, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai – 6000 034
Phone: +044 28265555
Email:feedback@parkelanza.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *