டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் (புதுப்பேட்டை கிளை) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் (புதுப்பேட்டை கிளை) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…. புதுப்பேட்டை கிளை தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் தவமகன் சிவந்தி ஆதித்தன் என்கிற பாடல் ஒலிப்பேழை வெளியீட்டு விழா மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழாவும் சென்னை புதுப்பேட்டையில் உள்ள நாராயணன் தெரு சந்திப்பில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் காயல் ஆர்.எஸ்.இளவரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ். சுப்பிரமணிய ஆதித்தன் முன்னிலை வகித்தார்.தினத்தந்தி அதிபர் சி,பாலசுப்பிரமணியன்ஆதித்தன் அவர்களின் புதல்வர் சி. பா. ஆதவன் ஆதித்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் காயல். ஆர். எஸ். இளவரசு அவர்கள் எழுதிய தவமகன் சிவந்தி ஆதித்தன் என்கிற பாடல் ஒலிப்பேழையையும் வெளியிட்டார். இறுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். மேலும் அவர் காயல்.ஆர். எஸ்.இளவரசு அவர்களின் புதல்வர் பியாஸ் உர்ரகுமான் அவர்களின் எப்.எக்ஸ் 3 என்கிற ஆடியோ மற்றும் வீடியோ பதிவு கொண்ட பிரம்மாண்டமான ஸ்டூடியோவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் . இவ்விழாவில் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஆர். எஸ் . நாசர்,நாடார் மக்கள் சக்தி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ் ,சென்னை நாடார் சங்கத்தின் செயலாளர் விஜயகுமார் பரமன்குறிச்சி ஆத்ம சைதன்யா மகாராஜு சுவாமிகள், ஆலீம் முகமது கல்லூரியின் செயலாளர் ஜமாலுதீன் எஸ்.டி. கொரியர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவாஸ் கனி தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் எஸ். கே. அகமது அலி, மதிமுக பகுதி செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *